அறியாமைப்பெருக்கு..

index

வயிறு வலிக்க சிரிக்க இந்த வீடியோ நிச்சயம் உதவும்.

இவரின் நீண்ட பட்டியலில் உங்களை எப்படி விட்டார், ஏனெனில் இலக்கிய உலகின்

இலுமினாட்டி நீங்கள் தானே.

கதிர் முருகன்

கோவை

https://www.youtube.com/watch?v=2x-Nz-wEdj0

***

அன்புள்ள கதிர்

என்னது ஆச்சரியமாக இருக்கிறது? திக என்னதான் செய்கிறது? ஆரியப்பார்ப்பனர்தானே இதையெல்லாம் செய்தார்கள்? அல்லது அவர்களும் இவர்களும் ஒன்றேதானா? அவர்களுக்கு இதெல்லாம் தெரியுமா?

வேடிக்கை ஒருபக்கம். இந்த இணைப்புக்கு ஏறத்தாழ ஒருலட்சம்பேர் வந்து பார்த்துச்சென்றிருக்கிறார்கள். இது தமிழகத்தின் அறிவுச்சூம்பலுக்கு மிகச்சிறந்த உதாரணம். இந்த அசட்டுத்தனத்துக்கு வரும் திரளில் பத்தில் ஒருபங்கு தமிழகத்தின் எந்த சிந்தனையாளனுக்கும் ஆர்வலர் வந்ததில்லை.

ஜெ