வானதி- நினைவுகளினூடாக…

1

கோவையில் வானவன் மாதேவியையும் இயலிசை வல்லபியையும் முதன்முறையாகச் சந்தித்த தருணம்என்னால் [கோவை 2011 ] என்னும் கட்டுரையாகப் பதிவுச்செய்யப்பட்டுள்ளது. 

கோவைக்கு புத்தகக் கண்காட்சிக்காகச் சென்றிருந்தேன்.  நண்பர்களுடன் நாஞ்சில்நாடன் வீட்டுக்குச் செல்லும்படி வாய்த்தது. அங்குதான் அவர்கள் வந்திருந்தனர். முன்னர் அவர்களை வாசகிகளாக அறிந்து மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி வழியாகப் பேசியிருக்கிறேன்.

நாஞ்சில்நாடன் வீட்டில்

 

அதன்பின் ஈரோட்டில் நிகழ்ந்த அறம் நூல்வெளியீட்டு விழாவுக்கு அவர்கள் வந்திருந்தனர்.  [அறம் வெளியீட்டுவிழா நிகழ்ச்சிப்பதிவு ] அந்நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட படங்களில் அவர்கள் இருப்பதை இன்று எடுத்துப்பார்த்தேன்.

அறம் வெளியீட்டு விழா ஈரோடு

வானதியும் வல்லபியும் விஷ்ணுபுரம் நண்பர்களின் வட்டத்துக்கு மிக அணுக்கமானவர்களாகவே இருந்தனர்.

ஏற்காடு முகாம் கூட்டுப்புகைப்படம்

ஏற்காடு காவிய முகாம். கூட்டுப்புகைப்படத்தில் வானதி இருக்கிறார். [ஏற்காடு காவிய முகாம் பதிவு]  எப்போதும் ஊட்டி வர விரும்பியிருந்தார். அவருடைய உடல்நிலை அங்கு வருவதற்கு ஒத்துழைக்கவில்லை.

வானதி ஏற்காடு இலக்கிய முகாம் குறித்து எழுதிய குறிப்பு ஒன்று என் தளத்தில் பிரசுரமாகியிருக்கிறது [வானதி எழுதிய குறிப்பு ஏற்காடு இலக்கிய முகாம்] 

வானதில் வல்லபி இருவரும் விஷ்ணுபுரம் விருதுவிழா நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருக்கிறார்கள். 2103 ,2014, 2015 நிகழ்ச்சிகளில் அவர்களின் வருகை ஒரு இனிய அனுபவமாக இருந்தது

 

ஏற்காடு இலக்கிய முகாமில் வானதி வல்லபி

 

நான் கடைசியாக வானதியைப் பார்த்தது அவர்களின் இல்லம் திறப்பு விழா நிகழ்ந்தபோது. அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நான் பேசினேன். வானதியை மிக மகிழ்ச்சியாகச் சந்தித்த தருணம் அது

வானவன் மாதேவி இல்லத் திறப்புவிழா  குறிப்பு

அந்த இல்லத்தை நான் திறந்துவைத்தேன். ஒரு கனவின் ஈடேற்றம் என்னும் தலைப்பில் அன்று பேசினேன்.

இல்லத்திறப்பு விழா

 ஆதவ் சகோதரிகள் கடிதங்கள்   .போன்று பல எதிர்வினைகளில் அவர்களின் இலட்சியவாதம் மீதான பெரும் ஈர்ப்பை வாசகர்கள் வெளியிட்டிருப்பதை வாசித்துக்கொண்டிருக்கிறேன். அறம் தொகுதிக்குப்பின் பெரும்பாலும் அதே மனநிலையில் நின்று நான் எழுதிய வெண்கடல் தொகுதியின் கதைகளை அவர்கள் இருவருக்கும் சமர்ப்பணம் செய்திருக்கிறேன் [பால்வெள்ளம்]

ii

 

நேற்று [17-1-2017] காலை கோவையிலிருந்து கிளம்பி காரில் நண்பர்களுடன் வானதியின் இல்லத்துக்குச் சென்றேன். வல்லபியைக் கண்டு பேசிவிட்டுத் திரும்பினேன். சொல்வதற்கொன்றும் இல்லை, அவள் கைகளைப் பற்றிக்கொள்வதை விட.

 

 

முந்தைய கட்டுரைசம்ஸ்காரா- கடிதங்கள்
அடுத்த கட்டுரைசுடர்தனை ஏற்றுக.. -கடலூர் சீனு