திருக்குறள் உரையாற்றுகிறேன், கோவையில்

 

index
[எல்லிஸ் துரை வெளியிட்ட திருவள்ளுவர் படம் பொறித்த தங்கக்காசு. திருவள்ளுவருக்கு உருவாக்கப்பட்ட முதல் தோற்றம் இது. புகழ்பெற்றிருக்கும் இன்றைய தோற்றம் பின்னர் உருவாக்கப்பட்டது]

வரும் 14,15, 16 தேதிகளில் நான் கோவையில் திருக்குறள் பற்றிப் பேசுகிறேன். மூன்றுநாட்கள் வரிசையாக மூன்று உரைகள். கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பாக.

திருக்குறள் பற்றிய உரைகளைப் பார்க்கும்போது வியப்பூட்டும் ஒன்று தோன்றியது, அது ஓர் இலக்கியநூல். ஆனால் புதியகாலகட்டத்தில் இலக்கியவாதிகள் மிகக்குறைவாகவே அதைப்பற்றிப் பேசியிருக்கிறார்கள். அதை ஒரு பண்பாட்டு அடையாளமாக ஆக்கிக்கொண்டமையால் அறிஞர்கள், ஆய்வாளர்கள் அதைப்பற்றி பேசியிருக்கிறார்கள். அரசியலாளர்கள் தங்கள் தேவைக்கேற்ப பேசிப்பேசி மேற்கொண்டு எவரும் அதைப்பற்றிப் பேசாமலாக்கிவிட்டிருக்கிறார்கள்

இலக்கியவாதியாக குறளைப்பற்றிப் பேசலாமென நினைக்கிறேன். பல்வேறு தருணங்களில் குறள் பற்றிச் சொல்லியிருக்கிறேன். அதைப்பற்றி ஒரு நீளுரையை நண்பர்கள் கோரினர். இது இலக்கிய உரைதான். நண்பர்களை அன்புடன் அழைக்கிறேன்.

இடம் : கிக்கானி மேல்நிலைப்பள்ளி, கோவை

நாள் : 14 , 15, 16 – ஜனவரி மூன்றுநாட்கள்

நேரம் : மாலை 6.30.

 

திருக்குறள் ஜமீன்தாரிணி உரை 

முந்தைய கட்டுரைஅராத்து கேள்விகள்…
அடுத்த கட்டுரை‘கச்சர் கொச்சர்’