Dear Sir,
வணக்கம். நான் சில வருடங்களாக உங்களை வசிக்கும் ஒரு வாசகன். ஒரளவ வாசிப்பு பழக்கம் உள்ளவன் என்று சொல்லிக்கொள்ள முடியும். இது முதல் கடிதம்.
“இந்த இணையதளத்தின் வாசகர்கள்…” என்ற இந்த கட்டுரையைப் பார்த்தவுடன் உங்களுக்கு இதை எழுதுகிறேன். I am your reader through RSS Feed.
–
உனக்கு உங்களின் எழுத்துக்கள் ஒரு நம்பிக்கை தரும் விஷயமாக இருக்கிறது.
நமது பண்பாட்டின் மீது உங்களுக்கு இருக்கும் புரிதலும் அதை பிறருக்கு புரியவைக்கும் பொறுமையும் உங்கள் மதிப்பை உயர்த்துகிறது.
கோட்பாடு சார்ந்து விஷயங்களை அலசும் உங்களின் அணுகுமுறை அனைவரும் பின்பற்றத்தக்கது.
வாழ்த்துக்களும் நன்றிகளும்.
அன்புடன்,
வேழமுகன்.
அன்புள்ள ஜெமோ,
தங்களுடைய ‘நலம்’ நூல் படித்துக்கொண்டிருக்கிறேன். நல்ல செய்திகளின் தொகுப்பாக அப்புத்தகம் உள்ளது. நன்றி. அதில் உள்ள ஒரு விஷயத்தை பற்றி எழுதுகிறேன்.
அதில் உணவு வகைகளை உஷ்ண மற்றும் குளிர் பதார்த்தங்களாக பிரிப்பது சரியில்லை என எழுதிருந்தீர்கள். உடலின் உஷ்ணம் சரியாக பார்த்துக்கொள்வது ஆயுர்வேதத்தில் ஒரு முக்கிய விஷயமாக இருக்கிறது. ஆங்கில மருத்துவத்தில் அது அங்கிகாரம் பெறவில்லை. ஆனால் நிதர்சன வாழ்வில் எனக்கு அந்த பாகுபாடு உதவுகிறது. என் அளவில் அது அடிப்படையில் சரியாகவே எனக்கு படுகிறது. சில குளிர்சியான பழவகைகளை (சீத பழம்) சாப்பிட்டால் எனக்கு உடனே சளி பிடிக்கும். அதேபோல் உடல் சூடாக இருக்கும் வேளைகளில் (விளையாடியபின்பு) உடனே குளிர்ந்த நீரை பருகினாலும் நமக்கு சளி பிடிக்கும். சிறிது நேரம் நன்றாக குளித்தால் முடித்தவுடன் சிறுநீர் தானாக கழிப்பதும் இந்த உடல் உஷ்ணத்தை சமன் நிலையையில் வைபதற்கே. இன்னும் பல விஷயங்களை கூறலாம்.
வேறு உயர் தளத்தில் உஷ்ணம் என்பதே சக்தி(energy)யாக நாம் நம் ஆயுர்வேதத்தில் பார்க்கிறோம். அதனாலேயே அதிகமாக பிராணாயாமம் செய்பவர்கள் மூலநோயால் அவதிபடுவார்கள். ஏனனில் பிராணாயாமம் நமக்கு சக்தி அளிக்கும். ராமகிருஷ்ணர் தொடர் மூலநோயாலும் வயிறுபோக்காலும் அவதிபட்டிருக்கிறார்.
உடம்பில் உஷ்ணம் இல்லாமையே ‘தமஸ்’சாகவும் இருந்தால் ‘ரஜஸ்’சாகவும் சமன்னிலையே ‘சாத்விக’மாகவும் பார்க்கிறோம்.
இப்படி உடல் உஷ்ணம் பல வகையில் நம் கலாச்சாரத்திலும் ஆன்மீகத்திலும் கருதப்படுகிறது. அதன் ஒருவகை புரிதலே உணவுவகைகளை பாகுபடுத்தி பார்ப்பது. நம் தனிப்பட்ட உடல் வாககின் படி சில மாறுதல்கள் இருக்கலாம், ஆனால் அடிப்படையில் ஒரு முக்கியபான நம் உடலை பாதுகாக்கக்கூடிய ஒரு நல்ல குறிப்பாகவே நான் பார்கிறேன்.
அன்புடன்
வே. விஜயகிருஷ்ணன்
அன்புள்ள விஜயகிருஷ்ணன்
இந்த தளத்தில் எனக்கு அதிகாரபூர்வமாக ஏதும் சொல்ல தெரியவில்லை. நான் மதிக்கும் மருத்துவர்களின் கருத்தையே எழுதியிருந்தேன். பொதுவாக ஒருவர் சொந்த உடலை அவதானித்து அடையும் முடிவுகளுக்கு அவரளவில் பொருளுண்டு என்றே நினைக்கிறேன்
ஜெ
Dear Jeyamohan,
Hope you are fine. I am fine here. Happy to know that your Asokavanam will be released next year. But sad that it is getting released in Thamizhini.
Yes because i looked for your Pin Thodarum Nizhalin Kural in Landmark / Odyssey / Higginbothams and in none of the shops the thamizhini publications are available. In Higginbothams main shop they told they don’t have liasion with Thamizhini. However your books in Uyirmmai publications are available everywhere. One exception is New Horizon Publications. I found your Naveena Thamizhilakkiyam Oru Arimugam and Pani Manithan in a couple of shops.
I know Thamizhini Publications is somewhere in Royapettah but don’t know the exact address nor it is available in channels like Just Dial.
Request you to look into this.
Liked your essay on Raja Raja Cholan but your point that there was women slavery in His time was surprising. I have read that there were women officers in main positions and that he respected his elder sister very much. He has even carved her name and his wives’ name in script (Naam koduthaannna …akkan koduthanna…pendulagal koduthanna..) even if women were in low-key during his period..that will be pertaining to that time..Did Raja Raja Cholan did anything to amplify that. Kindly clarify if you find time.
As usual love your website. thanks for all the wealth of information.
Thanks and Regards,
Krishnan R.
அன்புள்ள கிருஷ்ணன் ரவிக்குமார்
நீங்கள் சொன்னது உண்மை. என்னுடைய நூல்கள் கிடைப்பதில் சில சிக்கல்கள் உள்ளன. ஆனால் எழுத்து என்பது தொழில் மட்டும் அல்ல. அதில் உணர்வுபூர்வமான தொடர்புகள் உள்ளன. என்னுடைய எல்லா நூல்களையும் தமிழினி வசந்தகுமாரிடம் கேட்டபின் அவர் அனுமதியுடன் மட்டுமே இதுவரை பிற பதிப்பகங்களுக்கு கொடுத்திருக்கிறேன்
என்னுடைய பெரும்பாலான நூல்கள், மறுபதிப்புகள் கிழக்கு பதிப்பகத்தில் கிடைக்கும். உடுமலை டாட்காம் வழியாக எல்லா நூல்களையும் வாங்கலாம்
ஜெ
அன்புள்ள தோழர் ஜெயமோகன் அவர்களுக்கு,
கோதையின் மடியில் படித்ததுமே தங்களுக்கு எழுத எண்ணினேன். இப்போது கட்டாயம் உருவாகியிருக்கிறது… “ஒரு கட்டத்தில் இந்த இணையப்பதிவை நிறுத்த வேண்டியிருக்கும் என நினைக்கிறேன். ஏனென்றால் இது ஓர் அறிமுகதளம் மட்டுமே. இதற்கு இயல்பாகவே ஓர் எல்லை உள்ளது. இதற்கான தேவை முடிவடையும்போது இது வெறும் சம்பிரதாயமாக ஆகக்கூடும். எழுதவேண்டியவற்றை முழுக்க எழுதியபின் இதில் இருந்து விலகியாகவேண்டும்”
வாழ்வின் மகத்தாண தறுணங்களை நான் கோதையின் மடியில் பெற்றதாக உணர்ந்தேன். ஒரு தீவிர வாசகருக்குரிய மனநிலை இருந்தும் பெரிய ஆக்கங்களை வாசிக்காமலிருக்கும் என் போன்றவர்களுக்கு உங்களது இணையப்பதிவு நிறுத்தம் பெருத்த ஏமாற்றத்தைத் தரும். என்றாலும் நீங்கள் கூறும் “எல்லை” என்பது புரிந்துகொள்ளக்கூடியதுதான்.
அத்துனைக்கும் நன்றிகள்.
அன்புடன் ரவிச்சந்திரன்.
அன்புள்ள ரவிச்சந்திரன்
எழுத்து எனக்கு எப்போதுமே சுமையாக இருந்ததில்லை. ஆனால் பலசமயம் பிறவற்றை நோக்கி தீவிரமாக ஈர்க்கப்படுவேன். வேறுவேலைகளில் முழுமையாக மூழ்க ஆசைப்படுவேன். அந்நிலையில் இணையதளம் கூடுதல் பொறுப்பாக ஆகிறது
ஜெ