குகாவை ‘மொழிங்கடித்தல்’

index

இனிய ஜெயம்,

ராமச்சந்திர குகா அவர்களின் “சுற்று சூழலியல் ஒரு உலகம்  தழுவிய வரலாறு” நூலை திரு பொன் சின்னத்தம்பி முருகேசன் மொழி ” பெயர்த்து” இருக்கிறார்.

இப்படி.—-

IMG-20170102-WA0002

நானும் காலையில் இருந்து தமிழில் இதை எப்பாடு பட்டேனும் மறு மொழி பெயர்த்து  விளங்கிக் கொள்ள முயல்கிறேன்.

முடிந்தால் உதவவும்.

கடலூர் சீனு

images

அன்புள்ள சீனு,

தப்புசெய்துவிட்டீர்கள், சீனு தப்பு செய்துவிட்டீர்கள்

இதை தமிழாக்கம் செய்யக்கூடாது கூகிள் மொழியாக்க இயந்திரத்தைப் பயன்படுத்தி. ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்து மீண்டும் நீங்களே கூகிளைக்கொண்டு  தமிழாக்கம் செய்து வாசிக்கவேண்டும். நான் அவ்வப்போது அப்படிச் செய்வதுண்டு. பின்நவீனத்துவ எழுத்து என்றால் ஆங்கிலத்தில் இருந்து பிரெஞ்சுக்கு மொழியாக்கம் செய்து மீண்டும் ஆங்கிலமாக ஆக்கி அதை மீண்டும் தமிழாக்கம் செய்யவேண்டும்.

அதன்பின் நாம் ராமச்சந்திர குகாவுக்கே பாடம் எடுக்கமுடியும். பாவம் அவர் பதறிவிடுவார்.

ஜெ

முந்தைய கட்டுரை’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 79
அடுத்த கட்டுரைலண்டன் பிரபு,சு.வேணுகோபால்,ஒரு போட்டி