தாளில்லா பொருளியல் குறித்து -கார்த்திக்

1

அன்பு ஜெ

தாளில்லா பொருளியல் பாலா

தாளில்லா பொருளியல் கடிதங்கள் -அரங்கா

 

 

தாளில்லா பொருளாதார குறித்து வந்த கடிதங்களை பார்த்தேன்.எந்த மாற்றதையும் அது அளிக்கும் வசதி மற்றும் அதனால் வரப்போகும் நன்மைகளை மட்டுமே வைத்து எடைபோட்டுவிடலாகாது

மோடி அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் பீம் செயலி , பெயரிலிருந்து அது எப்படி செயல்படும் என்பது வ்ரை எல்லாம் சரிதான் . ஆனால் இது குறித்த முக்கிய இரண்டு விஷயங்களையும் நாம் கணக்கில் கொண்டே அது அளிக்கவிருக்கும் தாக்கத்தை எடைபோடுவது சரியாக இருக்கு.

 

 

1.பிரைவசி 

 

 

 

ஆதார் என்ற ஒற்றை அடையாளம் அரசு சேவைகளை பெற உபயோகப்படுத்து வரை அதற்கான தேவை நியாயப்படுத்திவிடலாம்   ஆனால் அந்த அடையாளத்தை நேரடியாக அரசு சேவையற்ற , அடையாளத்தை நிறுவ தேவையற்ற விஷய்ங்களுக்கு பயன்படுத்துவது மிக தவறான முன்னுதாரனம் and Privacy Breach.

 

 

நான் எந்த  பெட்டிக்கடையில் போய் என்ன வாங்குகிறேன் , எவ்வளவு வாங்குகிறேன் , எப்போதெல்லாம் வாங்குகிறேன் என்பதெல்லாம் இந்த செயலியின் மூலம் அரசு மிக எளிதாக நேரடியாக திரட்ட இயலும் . இதே ஆதார் எண்ணுடன் தான் என் வங்கி கணக்கும் லிங்க் செய்யப்பட்டுள்ளது அது நான் எங்கு வேலை செய்கிறேன் , எவ்வளவு சம்பாதிக்கிறேன் , என் வங்கியில் சேமிப்பு எவ்வளவு , எவ்வளவு கடன் வாங்கியுள்ளேன், எவ்வளவு வரி கட்டியுள்ளேன் என்று ஒருவரின் மொத்த பொருளாதார நடவடிக்கையையும் மேப் செய்துவிடும்

 

 

முன்பொரு கடிதத்தில் சொன்னது போல தகவல் என்பது ஒரு புது Asset Class அரசு என்பது உச்சஅதிகார மையம் இவ்விரண்டின் இணைவு என்பது தகவலதிகாரமாகவே மிக இயல்பாக உருமாறும் .

 

 

2.அரசின் செயல்தளம் 

 

 

அரசே நேரடியாக Digital Wallet & Payment gateway சேவை நடத்துவது நீண்ட கால நோக்கில் ஒரு சிறந்த அணுகுமுறையாக தோன்றவில்லை.இந்தியா போன்ற mixed market economy என்றாலும் கூட அரசு இதுபோன்ற Fintech விஷயங்களில் நேரடியாக ஈடுபடுவது போட்டியை நீர்த்துப் போகச்செய்து , சேவை , புதிய தொழில்நுட்பம் போன்ற விஷயங்களில் தேக்கமும் வளர்ச்சிக்குறைவும் நிகழும் சாத்தியத்தை  அதிகமாகும்

 

 

அரசே நேரடியாக இலவச Low Value Payments ல் களமிறங்கினால் மற்ற வணிக நிறுவனங்கள் இந்த களத்தில் போட்டி போட எந்த ஆதாயமும் இன்றிப் போய் இது அரசு மட்டுமே கையாளும் monopoly ஆகிவிடும்.

மேலும் இவ்வகை தகவல்களை திரட்டி பாதுகாப்பாக கையாளவது எளிதான விஷயமே அல்ல.கல்யாண வீட்டிற்குள் போய் வருவது போல அமெரிக்க அரசு கணினி வசதிகளினூடே ரஷ்ய ஹாக்கரகள் போய் வருவது ஊரறிந்த ரகசியம் .சமீபத்தில் நிகழ்ந்த அமெரிக்க தேர்தலில் போக்கையே இவை நேரடியாக பாதித்தது என்பதும் நாம் அறிந்ததே.

இந்திய அரசின் cyber security Infrastructure வளர்ச்சி என்பது மிக ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது .திடீரென்று ஒரு இடத்தில் ஆதார் எண்ணும் அந்த எண் சார்ந்த அனைத்து பண பரிவர்த்தனையும் ஒரே இடத்தில் திரட்டி வைப்பது திருப்பது உண்டியலை திறந்துவிடுவது  போன்றதுதான்

 

இதற்கு மாற்றாக அரசு இந்த LVP சந்தையை  மற்ற தொழில்நுட்ப / வணிக நிறுவனங்களிடமே விட்டுவிட்டு , அதை ஊக்குவிக்கும்விதமாக அந்நிறுவனங்கள்  அளிக்கும் குறைந்த மதிப்பு வர்த்தக சேவைக்காண செலவை அரசே நேரடியாக அந்த நிறுவனங்களுக்கு  அளித்துவிடலாம் . அந்நிறுவங்ங்களுக்கு உலக தரம் வாய்ந்த  cyber security & privacy சட்டங்கள் ,நிபந்தனைகள் விதிக்கலாம் , அதை கண்காணிக்கலாம் .

 

அதே போல ஆதார் எண்ணை அவசியமில்லாத தளங்களில் கோருவதையும் தவிர்க்க வேண்டும் . ஒருவர் ஈட்டிய பணத்தை அவர்தனதுஎன்று ஊர்ஜிதப்படுத்த முடிந்தால் போதுமானதாக இருக்க வேண்டும் அதுதான்தான் என்று நிறுவப்பட வேண்டியிருக்கக்கூடாது. (சந்தேகத்திற்குரிய அல்லது நிலம் வாங்குதல் போன்ற High value payments க்கு கோரலாம் ) இதற்கான நடைமுறை செயலிகள் இப்போதே வங்கிகளில் உள்ளன AML / KYC போல .

 

கருப்புப் பணம் ஒழிப்பு என்ற நிலைப்பாடு மெல்ல விரவி தாள் இல்லா பொருளியல் பின் அதுவே கண்கானிப்பு பொருளியலாக உருமாறுதை நம் கண்முனே காண்கிறோம்

 

மோடி எண்ணங்கள் நல்லவையாக இருக்கலாம் ஆனால் தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் பிழையான கொள்கைகள் அதற்குண்டான விளைவை உருவாக்கியே தீரும்

 

 

இது வேறெந்த அரசும் முன்னெடுக்காத  மிகச்சிக்கலான  மிகப்பெரிய சீர்திருத்தம் இதில் பிழைகள் தவிர்க்கமுடியாதது ஆனால் அதை இது குறித்த (அரசியல் நோக்கம் தவிர்த்த ) விமர்ச்னங்களை உள்ளெடுத்துக்கொண்டு மாற்றங்களை கொண்டு வர தயாராக இருக்க வேண்டும்.நம்பிக்கையாளர்களுக்கு மட்டுமே என்னிடம் தர உள்ளது அவநம்பிக்கையாளர்களுக்கு அல்ல போன்ற பேச்சுகள் தவிர்க்கப்பட வேண்டும் 

 

 

மிக முக்கியமான இதை நோக்கி ஆக்கப்பூர்வமாக வைக்கப்படும் விமர்சனங்களைக் கூட தேசத்துரோகம் என்று முத்திரை குத்தும் மூர்க்கத்திலிருந்து நாம் வெளிவ்ர வேண்டும் .

 

 

அன்புடன் 

கார்த்திக்

சிட்னி

 

 

முந்தைய கட்டுரை’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 81
அடுத்த கட்டுரைமாக்காயீக்கா மாண்புகள்