மாக்காயீக்கா மாண்புகள்

1

 

முப்பதாண்டுகளுக்கும் மேலாக மகஇக போன்ற அமைப்புக்களிலிருந்து விலகியவர்கள் வந்து கண்ணீருடன் புலம்புவதைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். எல்லாக் குறுங்குழுக்களுக்கும் இருவகைப் பண்புகள் இருக்கும். ஒன்று அது சிறியது என்பதனாலேயே எந்த விதமான நீக்குபோக்கும் இல்லாத மட்டையடித் தீவிரம் ஒன்று இருக்கும். ஆகவேதான் இளைஞர்கள் அது ‘நேர்மையான’ அமைப்பு என நம்பத்தலைப்படுகிறார்கள். அவர்களுக்கு நேர்மையான அமைப்பாகத் தோற்றமளிப்பது தவிர வேறு பணிகளும் இல்லை என்பதனால் வண்டை வண்டையாக வசைபாடுவதை முழுநேரமும் செய்துவருவார்கள். அது ஒருவகையான விறுவிறுப்பை சின்னப்பயல்களுக்கு அளிக்கிறது

 

ஆனால் சிறிய அமைப்பு என்பதனாலேயே உள்ளே நம்பமுடியாத அளவுக்கு சர்வாதிகாரப்போக்கு இருக்கும். ஆணையிடும் தலைவர் அடிமைகள் என்னும் அமைப்புக்கு அதிமுகவுக்கே இவர்கள் பாடம் எடுப்பார்கள். எதையும் விவாதிக்கலாம், விவாதித்தபின் மறுபேச்சின்று ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதே வழிமுறை. அந்த சூடு பட்டதுமே பலபேர் வெளியே பாய்ந்துவிடுவார்கள்.

 

இதைத்தவிர மூன்றாவது பண்பு இதிலுள்ள ரகசியத்தன்மை. ரகசியத்தன்மை அளிக்கும் ‘திரில்’ ஒன்றுக்காகவே சரக்கடிப்பதையே ரகசியநடவடிக்கையாகச் செய்வார்கள். எல்லா ரகசிய அமைப்புகளிலும் உள்ள முதன்மைப்பிரச்சினை பிற ரகசியநடவடிக்கைகள் அனைத்தும் இயல்பாக வந்து இணைந்துகொள்ளும் என்பதுதான். பாலியல் மீறல்கள், சாதிப்பெருமிதங்கள், மூடநம்பிக்கைகள் ,ஊழல்கள் இன்னபிற. சர்வாதிகாரம் இவற்றுடன் இணைகையில் உள்ளே உளுத்துநாற ஆரம்பிக்கிறது

 

மகஇக போன்ற அமைப்புக்காள் டவுன்பஸ் போல இருப்பது இதனால்தான். உள்ளே சென்றவர்கள் அதே விசையில் மறுபக்கம் இறங்கிவிடுவார்கள். இவர்களின் ஆள்சேர்ப்பு முகம் அதிதீவிரமாக நிகழ்வதென்பதனால் வேறுபத்துபேர் அந்தப்பக்கம் ஏறிக்கொண்டிருபபர்கள். தலைவர்கள்  ஓட்டுநரும் நடத்துநரும். வண்டி முக்கிமுக்கிச் சென்றுகொண்டே இருக்கும்

 

இதற்கும் அப்பால் கொஞ்சநாள் மஜாவாக உள்ளே சென்றுவந்தால் என்ன என்று யோசிப்பவர்களுக்கு ஒருவரி – இவர்களின் முதல் செயல்முறை விதியே குட்டிக்குரங்குதான் சூடு அள்ளவேண்டும் என்பதுதான்

 

இணையத்தில் மகஇக பற்றிய அந்தரங்களைப் பேசும் இந்த இணையப்பக்கத்தைப் பார்த்தேன். இந்த கட்டுரைகளில் இருக்கும் அப்பட்டமான உண்மை முகத்திலறைகிறது..குறிப்பாக அமைப்பின் மத்தியக்குழு உறுப்பினரின் மனைவியின் சொந்த வேலைகளைச் செய்த அனுபவம் [ நரோத்னிக்கா தலைமைப்பண்பு] சிரிப்பை வரவழைத்தாலும் பின்னர் வருந்தவும் வைத்தது

 நரோத்னிக்கா தலைமைப்பண்பு

தோழர் கோட்டைக்கு ஓர் எதிர் அஞ்சலி

கோட்டையை விட்டு…

எழில்மாறன் என்ற….

முந்தைய கட்டுரைதாளில்லா பொருளியல் குறித்து -கார்த்திக்
அடுத்த கட்டுரைஅராத்து விழா -கடிதம்