இனிய ஜேயெம் (சீனுவை சந்தித்தேன் அல்லவா :)
பாலாவின் அக்கறை கொண்ட நல்ல கட்டுரையை வாசித்தேன் , சில மாற்றுக்கள் மட்டும் ,
இந்திய அரசு ஆதார் வழி பணமில்லா பிளாஸ்டிக் கரன்சியை கொண்டுவந்துள்ளது , இறுதிப் பயனாளர்கள் பைசா செலவின்றி இணையம் இன்றி பணம் செலுத்த பெற அரசே வழி வகுத்துள்ளது ,
பக்கத்தில் உள்ள நாடார் கடைக்கு போகிறீர்கள் ,அவர் தன் சொல்போனில் 500-1000 ரூபாய் மதிப்புள்ள கைரேகை ஸ்கேனரை இணைத்துள்ளார் ,16 ரூபாய்க்கு அல்லது 50 ஆயிரம் ரூபாய்க்கு (10 ரூபாய் முதல் 50 ஆயிரம் வரை ஒருநாளைக்கு) பொருள் வாங்குகிறீர்கள் , உங்கள் ஆதார் கார்ட் அல்லது செல் எண்ணை உள்ளிடுகிறீர்கள் ,கைரேகை வைக்கிறீர்கள் , அதிகபட்சம் 5-8 வினாடிகளில் பணம் உங்கள் வங்கி கணக்கில் இருந்து நாடார் கணக்குக்கு மாறிவிடும் ,
உலகின் முதல் மின்னணு வாக்கு எந்திரம் உபயோகிக்கும் தேசம் உலகின் முதல் கைரேகை பாதுகாப்பு பண பறிமாற்றத்தை அறிமுகம் செய்துள்ளது ,மிகமிக பாதுகாப்பானது . முழுக்க இலவசம் -இருவருக்கும் , கடைக்காரர் மட்டும் இணையம் கொண்ட செல் வைத்திருந்தால் போதும் . வியாபாரம் தேவை என்கிறவர்கள் வைத்துக்கொள்வர் , பில் இல்லாமல் எல்லாம் எனக்கே என்பவர் ஏய்க்க முயல்வார்(இந்த செயலிக்கு பீம் என அம்பேத்கார் நினைவாக பெயர் வைத்துள்ளார்கள் , காகித நோட்டில் காந்தி ,நவீன இந்தியாவின் அடையாளத்திற்கு அம்பேத்கார் ,மகிழ்ச்சி)
பேடிஎம் போன்ற நிறுவனங்கள் முழுக்க உள்ளூர் மொழிகளில் இயங்குகின்றன ,ரேசன் கடைகள் தமிழில்தான் SMS அனுப்புகின்றன ,எனவே மொழிச்சிக்கல் கடக்க இயலாததல்ல , ( மேலும் உலகின் பீகாரான ஆப்ரிக்காவில் மொபைல் வழி பணப்பறிமாற்றம் மிக வெற்றிகரமாக நடந்துகொண்டுள்ளது ,நடத்துவது நம் ஏர்டெல்.
இரண்டாவதாக விவசாய வருவாய் குறித்து ,இரட்டை தொழில் செய்பவர்க்கு வரி என்றால் இன்று இருக்கும் விவசாய காதலை மக்கள் கைவிடுவர் ,விவசாய முதலீடு சுத்தமாக நின்றுவிடும் , விவசாய வருமான வரம்பு அல்லது எதாவது யோசிக்கலாம் .
அரங்கா
அன்புள்ள ஜெமோ
பாலா எழுதிய கடிதம் சிறப்பாக இருந்தது. அவரிடம் மோடியின் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை பற்றிய ஆழமான அவநம்பிக்கை இருக்கிறது. அவர் முகநூலில் மிகவும் கடுமையாக எழுதியவற்றை நானும் வாசித்திருக்கிறேன். ஆனாலும் இந்தக்கட்டுரை முக்கியமானது என நினைக்கிறேன்
ஒன்றுதான் சொல்லவேண்டும். இந்தமாதிரியான முயற்சிகள் தோல்வியடையலாம். ஆனால் முயற்சிசெய்வதே பாவம் அதன் நோக்கமே ஏழைகளை அழிப்பதுதான் என லபோதிபோ கூப்பாடு போடும்போது போடுபவர்களின் கிரிடிபிலிடி தான் இல்லாமலாகும்
ஜெயராமன்