விருது விழா 2016 புகைப்படங்கள் நாள் 1

IMG_8268

24-12-2016 காலை 10  மணிக்கு சந்திப்புகள் தொடங்கின . முதல் அமர்வாக நாஞ்சில்நாடன் வாசகர்களைச் சந்தித்தார். நகைச்சுவையும் விமர்சனமுமாக நாஞ்சில் பண்டை இலக்கியங்கள் முதல் நவீன கவிதை வரை விரிவாக உரையாடினார். அதன்பின் பாரதிமணி நவீனநாடகத்துடன் தன் ஐம்பதாண்டுக்கால வாழ்க்கைபற்றி உரையாடினார். பாட்டையாவின் நக்கலும் நையாண்டியும் கூடவே மிகக்கறாரான விமர்சன அணுகுமுறையும் வெளிப்பட்ட நிகழ்ச்சி

 

மதியத்திற்குப்பின் இரா.முருகன் வாசகர்களைச் சந்தித்தார். அவருடைய அரசூர் வம்சம், விஸ்வரூபம் போன்ற படைப்புக்களைப்பற்றிய விரிவான உரையடல் நிகழ்ந்தது. மாலையில் பவாசெல்லத்துரை தன் படைப்புலகம் பற்றியும் தான் சந்தித்த மனிதர்களைப்பற்றியும் பேசினார். கிட்டத்தட்ட இரண்டரைமணிநேரம் சிரிப்பும் குதூகலமுமாகச் சென்ற பொழுது

 

இரவில் நண்பர் செந்தில் நடத்திய நவீன இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சி நடந்தது. அனேகமாக இலக்கியநிகழ்வுகளில் இம்மாதிரி ஒன்று முதல்முறையாக என நினைக்கிறேன். மிகக்கடினமான கேள்விகளுக்குக்கூட பதில்கள் வந்தது மிக வியப்பானதாக இருந்தது [ உதாரணம் நல்லசிவம் என்பது எந்த எழுத்தாளரின் ஆல்டர் ஈகோவாக அவருடைய படைப்புகளில் வருகிறது?] மிக உற்சாகமான ஒரு நிகழ்ச்சியாக இருந்தது. இனிவரும் காலங்களிலும் இதைத்தொடரவேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டது. அலையலையாக வாசித்த நூல்களை, கதாபாத்திரங்களை நினைவுறுத்தும் ஒர் இனிய நிகழ்ச்சி இது

 

இரவு பத்துமணிக்குமேல் கு.சிவராமன் மாற்றுமருத்துவம் குறித்து உரையாடினார்.நண்பர் சுனீல்கிருஷ்ணன் மரிராஜ் ஆகியோரும் விவாதங்களில் கலந்துகொண்டனர். கிட்டத்தட்ட 13 மணிநேரம் தொடர்ச்சியான விவாதங்கள். சலிப்பூட்டாத நகைச்சுவை இருந்தமையால் பொழுது கொண்டட்டமாகவே சென்றது

 

புகைப்படத் தொகுப்பை இங்கே காணலாம்

https://goo.gl/photos/pBNM2eQSHQXzy5o18

மேலும்

https://goo.gl/photos/GT8ZJdEUzFLmgsy18

 

 

முந்தைய கட்டுரைவிலகும் திரையும் வற்றும் நதிகளும்- ஏ.வி.மணிகண்டன்
அடுத்த கட்டுரை’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 68