பல்லவ மல்லை – சொற்பொழிவு அழைப்பிதழ்

images

அன்பு ஜெமோ,

தமிழ் பாராம்பரிய அறக்கட்டளையின் பேச்சுக் கச்சேரி குறித்து அறிமுகம் தேவையில்லை. 2011ல் முதல்முறையாக பேச்சுக்கச்சேரி ஆரம்பிக்கப்பட்டபோது, முதல் நிகழ்வாக ‘குறுந்தொகை – தமிழ்க் கவிமரபின் நுழைவாயில்’ என்னும் தலைப்பில் சங்க இலக்கியங்கள் குறித்த தங்களது சிறப்புரை இடம்பெற்றது. வெற்றிகரமாக ஐந்தாண்டுகளைக் கடந்திருக்கிறோம்.

இம்முறை ‘பல்லவ மல்லை’ என்னும் தலைப்பில் மாமல்லபுரத்தின் சிறப்புகளை விளக்கும் தொடர் பேச்சுக் கச்சேரியாக, வரும் டிசம்பர் 24 & 25 ஆகிய இரண்டு நாட்களும் கோட்டூர்புரம், தமிழ் இணையப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவிருக்கிறது. இந்நிகழ்வில், மாமல்லபுரத்தின் வரலாறு, கலைச் சிறப்பு, பல்லவர் காலத்து கல்வெட்டுகள், மல்லையின் இலக்கியச் சிறப்புகள் குறித்து பல்வேறு ஆய்வாளர்களின் உரைகள் இடம் பெறுகின்றன.

விஷ்ணுபுரம் விருது விழாவுக்காக கோவையில் நீங்கள் கூடியிருக்கும் நாளில், நடைபெறும் நிகழ்வு இது என்பதை நன்கறிவோம். விஷ்ணுபுரம் விழாவில் கலந்து கொள்ள இயலாத சென்னை வாழ் வாசகர்களுக்கு இதுவொரு வாய்ப்பாக அமையும் என்று நம்புகிறோம். :-)

​அன்புடன்,

ஜெ. ரஜினி ராம்கி

முந்தைய கட்டுரை’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 63
அடுத்த கட்டுரைவருகையாளர்கள் 4, மருத்துவர் கு .சிவராமன்