மாலைநேரத்தில் நகைச்சுவைப் பதிவுகளைப்பார்த்துவிட்டுத் தூங்குவது என் வழக்கம். சமீபத்தில் பார்த்த உச்சகட்ட நகைச்சுவை இது. இதற்கு எத்தனை பார்வையாளர்கள். இதற்கு ஒரு எதிர்வினை, அதுதான் கிளாஸிக்!
இப்பாடலில், பெரும்பாலான நூல்கள் சொல்லும் தமிழன் தான் அறிவியலின் முன்னோடி என்றகருத்தை தாங்கள் எவ்வித முரண்பாடுமின்றி ஏற்றுக்கொள்ளக்கின்றீர்கள்.ஆனால் அவர்கள் சொல்லும் அந்த சக்கரம்,வானூர்தி போன்றவையெல்லாம் இல்லையே,?என்பது தான் உங்களுடைய கருத்தாகும் . உங்களின் சந்ததேக்கத்திற்கு என்னுடைய பதில் அவையெல்லாம் பல்லாாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததால் தான் புலவர்கள் அதை பற்றி எழுதியுள்ளார்.ஆனால் காலப்போக்கில் அவையெல்லாம் அழிந்திருக்க வாய்ப்புண்டு.ஆனாலும் அவைகள் இருந்த தடங்கல் இன்றும் திருச்செங்கோடு போன்ற இடங்களில் காணப்பெருக்கின்றது. மேலும் தமிழன் என்பவன். இறைவனின்அருளை பரிபூரணமாக பெற்றவன் அவனால் கண்டிப்பாக சூரியனுக்கென்ன அதையும் தாண்டி வெற்றிடத்துக்கே சென்றிருக்க முடியும்.ஆகவே இதை பற்றி தங்களுக்கு எவ்வித முரண்பாடும் தேவையில்லை.தமிழன் தான் அறிவியலின் முன்னோடி.அவன் ஆதாரங்கள் இல்லையென்றாலும் அவன் எழுதிய குறிப்புகள் மூலம் அவையெல்லாமும் உண்மையே.உண்மையே.உண்மையே….
அதன் உச்சகட்டம் இந்த வரலாற்றுத்தொடர்!!!!
https://www.youtube.com/watch?v=PePhtG1mp1k
இதன் பின்னணிக்குரல்தான் எத்தனை கம்பீரம்! அற்புதம். சிரிக்காமல் வேறு இதைச் சொல்லிமுடித்திருக்கிறார் மன்னன். கலைஞன்யா நீ என்று அவரிடம் சொல்லத்தோன்றுகிறது.
எத்தனைகோடி இன்பம் வைத்தாய் இறைவா!