எச்.எஸ்.சிவப்பிரகாஷ், மதுரைக்காண்டம்

interview_shivaprakash

எச்.எஸ் சிவப்பிரகாஷ் விக்கி பக்கம்

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருதுவழங்கும் விழா இவ்வருடம் டிசம்பர் 25 அன்று கோவை பாரதிய வித்யாபவன் அரங்கில் நிகழ்கிறது. சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக கன்னட எழுத்தாளரும் கவிஞருமான எச்.எஸ்.சிவப்பிரகாஷ் கலந்துகொள்கிறார்.

சிவப்பிரகாஷ் இருபதாண்டுகளுக்கு முன்னரே எனக்கு அறிமுகமானவர். எப்போதும் அவருடன் நல்லுறவு எனக்கு இருந்தது. அவருடைய நாடகமான மதுரைக்காண்டம் பாவண்ணன் மொழியாக்கத்தில் தமிழில் வெளிவந்துள்ளது

அதன் பிடிஎஃப் வடிவம் இணைக்கப்பட்டுள்ளது. விழாவுக்கு வரும் வாசகர்கள் அதை வாசித்திருந்தால் அவருடன் உரையாடமுடியும் என நினைக்கிறேன்

மதுரைக்காண்டம் கண்ணகியின் கதையை ஒட்டி எழுதப்பட்டது. பலமுறை வெற்றிகரமாக மேடையில் நிகழ்த்தப்பட்டது. நடனமும் நாடகமும் கலந்தவடிவில் இது அமைந்துள்ளது. சிவப்பிரகாஷுக்கு தமிழ்ப்பண்பாட்டுடன் உள்ளதொடர்பும் ஈடுபாடும் வெளிப்படும் ஆக்கம் இது

மதுரைக்காண்டம்

 

முந்தைய கட்டுரைகன்யாகுமரி 2 -உன்னதமாக்கல்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழா தங்குமிடம்