நாளை மறுநாள், நவம்பர் 18 காலை, நண்பர் செல்வேந்திரன் தன் காதலி திருக்குறளரசியை திருச்செந்தூரில் மணக்கிறார். சென்னையில் இருந்து வசந்தகுமார் வருகிறார். நாகர்கோயிலில் இருந்து நானும் தூத்துக்குடியில் இருந்து தேவதேவனும். திருமணம் முடிந்தபின்னர் ஒரு டாக்ஸி பிடித்து திருச்செந்தூர் – ஏரல் வட்டாரத்து சில ஊர்களையும் கங்கை கொண்டானையும் பார்க்க உத்தேசம்.
அதன் பின்னர் அப்படியே பஸ்பிடித்து ஈரோடு செல்கிறோம். அங்கே 20 ஆம் தேதி நண்பர் கார்த்திக் திருமணம். அரங்கசாமி காரிலேயே செல்வதாக இருந்தோம். சில அசௌகரியங்கள். ஆகவே பஸ்ஸிலேயே செல்ல உத்தேசம். நண்பர்களை இவ்விடங்களில் சந்திக்கிறேன்
http://www.selventhiran.blogspot.com/