சிறுகதைகள் கடிதங்கள் 17

Tharunadithan

 

அன்புள்ள ஜெமோ

கதைகளை வாசித்துமுடித்துவிட்டு உங்கள் மதிப்புரைக்காகக் காத்திருந்தேன். நீங்கள் சொன்ன பலவிஷயங்களுடன் உடன்படுகிறேன். பெரும்பாலான சிறுகதைகளில் ஆனந்த விகடனின் க்ளீசேக்கள் நிறைந்திருந்தன. ஆசிரியரே கதைக்குள் வந்து ‘அப்புறம் என்ன ஆச்சு’ என்பதுபோன்ற வரிகளும் க்ளீசேக்ககள்தான். அதையெல்லாம் தனியாக வாசித்துப்பார்த்து களையெடுத்தாகவேண்டும் என்பதுதான் என் எண்ணம்

ஆனால் நிறையபேர் எழுதுவது உற்சாகமூட்டுவதாக இருந்தது. அவர்களுக்கு இவ்வளவு வாசகர்கள் இல்லை. இப்போது இத்தனைபேர் வாசிப்பதே அவர்களுக்கு அதிர்ச்சியானதாகத்தான் இருக்கும்

பிரியம்வதாவின் குறிப்புக்களை நான் விரும்பி வாசித்தேன். நல்ல நடையில் நினைப்பதை விமர்சனமாகச் சொல்ல அவரால் முடிகிறது. அவர் சிறுகதைகளும் எழுதலாமே

நாகராஜ்

***

ஜெ,

சிறுகதைகளை வாசித்தேன். என்னுடைய கருத்துக்கள் இவை

  1. சதீஷ்குமாரின் அறிவியல் சிறுகதையின் கரு நல்லது. கேயோஸ் தியரிக்கும் அப்பாலிருக்கும் ஒன்றுதான் வாழ்க்கையை நீட்டிக்கிறது என்று எழுதியிருந்தார். கதையைக் கூர்மையாகச் சொல்லவில்லை. வளர்த்தியமையால் சலிப்பூட்டுகிறது
  2. அனோஜனின் கதையும் ரொம்பவே வளர்த்தப்பட்டிருக்கிறது. அந்தப்பூனை கதையில் தொடக்கம் முதலே வந்திருக்கவேண்டும்
  3. சுனீல் கிருஷ்ணன் கதையின் முக்கியமான பிரச்சினை நீதி சொல்வதுதான். நீதியை குறிப்பாக உணர்த்தினாலும் அது நீதிக்கதைதான். நீதி சொல்லாதீர்கள் சார். வாழ்க்கையைச் சொல்லுங்கள்
  4. காளிப்பிரசாத், மாதவன் இளங்கோ கதைகளில் உள்ள குறை செண்டிமெண்ட். அதை மறுபரிசீலனை செய்வதுதான் நவீன இலக்கியம். இந்த நடத்தைக்குப் பின்னாடி ஒரு சோகம் உள்ளது. என்று நினைப்பதும் சரி அவ அப்டி செய்வ்வான்னே நினைக்கலை என்று சொல்வதும் சரி பெட்டி செண்டிமெண்ட் என்போமே அதுதான்
  5. சிவாகிருஷ்ணமூர்த்தியின் கதை நல்ல கதை. தொடக்கம் ஒரு மெல்லிய நகைச்சுவையிலே ஆரம்பித்திருக்கலாம்
  6. தருணாதித்தன் கதைதான் டாப். ஆனால் வானிலை என்ற விஷயத்தை பகடிக்காக கொஞ்சம் கூடுதலாகப் பயன்படுத்தியிருக்கலாம். வானிலை சொல்வதில் உள்ல முறையை பயன்படுத்தி பகடி எழுதியிருக்கலாம். வானிலை சொல்வதுபோலவே சோசியம் சொல்லி அதுவே பிரபலமாக ஆகிவிட்டது – என்பதைமாதிரி
  7. கலைச்செல்வியின் கதை நல்ல கதை. ஆனால் மஞ்சுக்குட்டியை இன்னும் கொஞ்சம் தெளிவாகக் கண்ணிலே காட்டியிருக்கலாம். அவள் கதைக்குள் பேசவே இல்லை. மூத்தாள் அடித்தபோது அவள் என்ன நினைத்தாள் என்று சொல்லப்படவே இல்லை

ராகவன்

***

அன்புள்ள ஜெ,

புது எழுத்தாளர்களின் சிறுகதைகளை தங்கள் வலைப்பதிவில் பிரசுரித்து, விமர்சனம் செய்தமைக்கு நன்றி.

இளம் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டியாகத் தங்களின் இந்த முயற்சியை பாராட்டுகிறேன். இது உண்மையில் யாரும் செய்யாதது. இதுவும் ஒரு வகையில் எழுத்துச் சேவை என்று தான் நான் கருதுகிறேன்.

என் கதை 10,5 நொடிகளின் குறைகளைச் சுட்டிக் காட்டியிருந்தீர்கள். அறிவியல் கதை என்பது ஒரு மிகைக் கற்பனை உலகத்தை வாசகர்கள் முன் நிறுத்த வேண்டும் என்றும் அதன் மூலம் வாழக்கைத் தத்துவத்தை வாசகன் காணும்படி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தீர்கள். இந்தக் கதை வெறும் அன்றாட வாழ்க்கைச் சம்பவத்தை எடுத்துக் கொண்டிருக்கிறது என்றும் கூறியிருந்தீர்கள்.

இதிலிருந்து நான் முரண்படுகிறேன்.

For every action there is an equal and opposite reaction

என்பது ஒரு அறிவியல் விதி. அனைவரும் இதை வெறும் ஒரு கோட்பாடாகத்தான் பார்ப்பார்கள். ஆனால் ஒரு அறிவியல் எழுத்தாளன் இந்த அறிவியல் விதியிலிருந்து ஒரு கதையைப் பார்ப்பான். அறிவியல் விதிகளை வாழ்க்கையுடன் பொருத்திப் பார்ப்பான். அந்தக் கதை ஒரு சாதாரண வாழ்க்கைச் சம்பவமாகக் கூட இருக்கலாம். ஆனால் அதன் அடிநாதம் ஒரு அறிவியல் கருத்தைக் கொண்டு இருக்கும்.

அறிவியல் கதையில் வாழ்க்கையைத் தேடு என்று நீங்கள் கூறுகிறீர்கள். வாழ்க்கையிலும் அறிவியல் கதையைத் தேடலாம் என்று நான் சொல்கிறேன். இதில் தான் நம் கருத்து வேறுபாடே.

பி.கு. நீங்கள் எதிர்பார்க்கும்படி மிகைக்கற்பனைக் கொண்ட அறிவியல் கதைகளும் எழுதியுள்ளேன். கடவுள் யார், காலத்தை வென்றவன், தெய்வமகன் என்ற என் கதைகள் இந்த இலக்கணத்திற்கு உட்பட்டு வரும். இக்கதைகள் என் வலைதளத்தில் உள்ளன. இவற்றை சென்ற வருடம் தங்கள் பார்வைக்கு அனுப்பியிருந்தேன்.

http://sathish-story.blogspot.in/

நேரம் செலவிட்டு என் கதையை விமர்சனம் செய்தமைக்கு மீண்டும் நன்றி.

நன்றி சத்திஷ்

***

அன்புள்ள ஜெ

மேற்கொண்டு யாரும் கதைகிதை அனுப்பிக் கருத்துக்கேட்கவேண்டாம் என்று சொல்லிவிட்டீர்கள். இனிமேல் பயப்படுவார்கள். நான் இதுக்காகவே கதை எழுதலாமென்று நினைக்கிறேன். சரியா?

கதைவிமர்சனம் இவ்வளவு ஜரூராக நடக்கிறது. பொதுவாக முகநூலில் சத்தத்தையே காணோமே என்றுபார்த்தேன். சண்டைபோடுவதற்கு ஏதாவது இருந்தால்தான் பேசுவார்கள்போல. எவன் உக்காந்து படிப்பது என்று நினைக்கிறார்கள்

ரவி

 

=======================================================

சிறுகதைகள் என் பார்வை -1

சிறுகதைகள் என் பார்வை 2

சிறுகதைகள் என் பார்வை 3

சிறுகதைகள் என் பார்வை 4

சிறுகதைகள் என் பார்வை 5

சிறுகதைகள் என் பார்வை 6

==============================================================================

சில சிறுகதைகள் 6 அனோஜன் பாலகிருஷ்ணன் கலைச்செல்வி சதீஷ்குமார்

சில சிறுகதைகள் 5 மோனிகா மாறன், தருணாதித்தன்

சில சிறுகதைகள் 4 – தூயன், மகேந்திரன், கே ஜே சோக் குமார்

சில சிறுகதைகள் 3 மாதவன் இளங்கோ சிவா கிருஷ்ணமூர்த்தி

சில சிறுகதைகள் 2 காளிப்பிரசாத் சுனீல் கிருஷ்ணன்

சில சிறுகதைகள் 1 – ராம் செந்தில் உதயன் சித்தாந்தன்

==============================

சிறுகதை விமர்சனம் 1

சிறுக்தை விமர்சனம் 2

சிறுகதை விமர்சனம் 3

சிறுகதை விமர்சனம் 4

சிறுகதை விமர்சனம் 5

சிறுகதை விமர்சனம் 6

சிறுகதை விமர்சனம் 7

சிறுகதை விமர்சனம் 8

சிறுகதை விமர்சனம் 9

சிறுகதை விமர்சனம் 10

சிறுகதை விமர்சனம் 11

சிறுகதை விமர்சனம் 12

சிறுகதை விமர்சனம் 13

சிறுகதை விமர்சனம் 14

சிறுகதை விமர்சனம் 15

சிறுகதை விமர்சனம் 16

 

முந்தைய கட்டுரைஇயற்கைவேளாண்மை -கடிதம்
அடுத்த கட்டுரைஏழாம்உலக அனுபவம்