சிறுகதைகள் கடிதங்கள் -14

[தருணாதித்தன்]

அன்புள்ள ஜெயமோகன்,

 

நன்றி. ஒவ்வோரு நாளும் இவ்வளவு எழுதிக் கொண்டு, இவ்வளவு படித்துக் கொண்டு, நண்பர்கள் வட்டம், பிரயாணங்கள் எல்லாவற்றுக்கும் நடுவே, புதிய எழுத்தாளர்களை ஆழ்ந்து படித்து , அவற்றைப் பற்றி விரிவான மதிப்பீடுகளுக்கு.

 

என்னுடைய கதைகளைப் பற்றி மிகத்துல்லியமாக எழுதி இருக்கிறீர்கள். குறைகளை மிகச் சரியாக காட்டி இருக்கிறீர்கள், அதே சமயம் எப்படி திருத்தினால் இன்னும் மேம்படும் என்ற குறிப்புகளுடன். அதுதான் எனக்கு முக்கியம். நீங்கள் சொல்லி இருக்கிற மாபெரும் முன்னோடிகள்தான் என்னுடைய குரு பரம்பரை. மிகச் சரியான கணிப்பு.

 

மேலும் என் கருத்துக்களை இப்போதே எழுத விருப்பம்,  ஆனால் வார நாளில், அதுவும் காலையில் இயலாது..

 

நன்றிகள் பலகோடி நூறாயிரம்.

 

தருணாதித்தன்

 

அன்புள்ள தருணாதித்தன்,

 

உங்கள் மொழிநடைக்குள் இருக்கும் இயல்பான நகைச்சுவை பெருகுக

 

ஜெ

தருணாதித்தன் சிறுகதைகள்

p[மகேந்திரன்]

அன்பிற்கும், பெரும் மதிப்பிற்கும் உரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். நலம் என்று எண்ணுகிறேன்.
கொஞ்ச நாட்களாகவே கடிதம்  எழுதவேண்டும் என்று  நினைத்திருந்தேன் விஷ்ணுபுரம் பற்றி, உங்களை என்  வீட்டுக்கு அழைப்பதைப் பற்றி,ஆன்மிகம் பற்றி ….. வேலைப் பளுவால்  முடியவில்லை.

இருபது நாட்களுக்கு அப்புறம், உங்கள்  தளத்தை இப்போதுதான்  பார்க்கமுடிந்தது. என்னுடைய  புகைப்படம் இருப்பதைப் பார்த்து  ஆச்சரியப்பட்டேன்.அப்புறம் கொஞ்ச  நேரம் எடுத்துப் படித்த போதுதான் எல்லாவற்றையும்புரிந்துகொள்ள  முடிந்தது.

நீங்கள் என்னுடைய கதையைப் படித்து  விட்டு அதற்கான விமர்சனம் சொன்னீர்கள் என்பதே பெரிய விசயம்  என்று நான் நினைக்கிறேன்.உங்களுக்கு இருக்கும் வேலைப் பளுவில்  இதையெல்லாம் செய்யவேண்டிய அவசியம் இல்லை ஆனாலும்  செய்திருப்பது உங்கள்  பெருந்தன்மையையும்,புதிய  எழுத்தாளரின் வளர்ச்சியைப் பற்றிய  அக்கறையையும்தான்காட்டுகிறது.  மகிழ்ச்சி.

விமர்சனம் செய்வது என்பது கூட  எளிதான காரியம் இல்லை போலும். உங்கள் விமர்சனம் மிகக் கச்சிதமாக  இருக்கிறது. எடுத்துக்காட்டாய் நான் கதை என்று சொல்லிக்கொள்ளும்  ஒன்றுக்கு நீங்கள் எழுதிய விமர்சனம். சிறுகதைக்கான முதல் பத்தியை மட்டும் விரித்து எழுதப்பட்டது போல உள்ளது. இதற்கு மேல் கூர்மையாகவும், கச்சிதமாகவும் சொல்ல முடியும்என்று தோன்றவில்லை.

இது என் மிக ஆரம்பக் கால கதை என்று சொல்லுவதை விட நான் இன்னும தொடங்கவே இல்லை என்பதே உண்மை. எப்படிச் சிறு குழந்தை “அ” போட்டு நம்மிடம் காட்டினால் இருக்கும் அது  போல இருக்கிறது. அது “அ” இல்லை என்றாலும், குழந்தை வளர, வளர அது  கச்சிதமானதாய் மாறும்.அது போலத்தான் நான் எழுதிய கதையும்,  சிறுகதைக்கான வடிவத்தையோ, தொழில்நுட்பத்தையோ இன்று  கொண்டிருக்கவில்லை. எல்லா விமர்சனங்களையும் நான் மதிக்கிறேன். காரணம், என் கதைக்கான உண்மை  நிலையையே பிரதிபலிப்பதாய் உள்ளது.

எத்தனை முறை ஜெ அவர்கள்  சிறுகதையைப் பற்றி சொல்லி  இருக்கிறார்,இருந்தும் இது போன்ற  கதையை எழுதி அனுப்பியதற்காக  வருத்தம் அடைகிறேன். குறைந்தது வடிவ  ஒழுங்காவது இருந்திருக்க வேண்டும். சிறுகதை பற்றி எனக்குத் தெரிந்தாலும் அது ஜெவின் கருத்துக்களாக என்னுள் இருக்கிறது. என்றைக்கு அது  என் எண்ணங்களாக ஆகிறதோ அன்று நல்ல கதை எழுதவருமென  நினைக்கிறேன். என்ன.. அது கோரும் உழைப்பையும், நேரத்தையும் தர  முடியாத நிலையில் இருக்கிறேன்.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். நான்  எழுதியது சிறுகதையே இல்லை என்பதும் உண்மை. ஆனால் வரும்  நாட்களில் நல்ல சிறுகதைகளை எழுதுவேன் என்பதும் உண்மை.

நான் இரண்டு நபர்களுக்கு நன்றி  சொல்லியே ஆக வேண்டும்.
ஒன்று மதிப்பிற்குரிய ஜெ அவர்களுக்கு. திடீரென நிர்வாணமாய் ஆகாயத்தின் முன் நிறுத்திவிட்டார்.  எப்படி கீழே உட்கார்ந்திருப்பவனை மேடையில் வந்து பேச சொன்னால்  இருக்குமோ அதைப் போல. நான் எவ்வளவு மோசமாய் கதை எழுதுவேன்என்று எல்லோருக்கும்தெரிந்துவிட்டது, இனி பயமில்லை. சிறுகதையை நோக்கி நான் நகரும்ஒவ்வொரு முயற்சியும் என் வெற்றிதான் என்று நினைக்கிறேன்.  அந்தவகையில் அவருக்கு நன்றி.
மற்றொரு நன்றி எழுத்துப்பிழையைச்  சரி செய்ய. இணையதளத்தைக்காட்டியதற்காக அந்தச் சகோதரிக்கு. புதிய எழுத்தாளர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

ஜெ அவர்களே நீங்கள் சென்னைக்கு
வருகின்ற நாட்களில், எதாவது ஒருநாள் மதிய உணவுக்கு எங்கள் வீட்டுக்கு வர வேண்டும். பக்கத்தில் புராதனசிவன் கோயில் இருக்கிறது சென்றுவிட்டு மாலைவேளையே நீங்கள் திரும்பிவிடலாம்.

நன்றி,
மகேந்திரன்.

 

அன்புள்ள மகேந்திரன்

 

இளமையில் கடுமையான விமர்சனங்கள் நல்லவை. அவை சீண்டுகின்றன. நம் உள்ளாற்றல் நமக்குத்தெரியும் என்பதனால் விமர்சனங்களைப் பார்க்கையில், இல்லை நான் இவ்வளவல்ல, நான் இதற்கும் மேலே என்று நம் உள்ளம் சொல்கிறது. அந்த அறைகூவலை நாம் நமக்கே விட்டுக்கொள்ளவேண்டும்\

 

வாழ்த்துக்கள்

 

ஜெ

download (1)[கெ ஜே அசோக்குமார் ]

 

அன்புள்ள ஜெ.

வணக்கம். முன்பு வாசலில் நின்ற உருவம் கதை வந்தபோது சொன்ன கருத்துகளைக் கொண்டு என் எழுதும் முறையை மாற்றி எழுத ஆரம்பித்திருந்தேன். இந்தபாம்புவேட்டை கதையின் உங்கள் கருத்துக்களை படித்ததும் இன்னும் என் மனதில்
மாற்றம் நிகழவில்லையோ என்று அச்சம் தோன்றுகிறது.

முதலில் கதை எழுதித் தேர்ந்த கையால் எழுதியது என்று தொடங்கி, முடிவில் கதை நிகழ‌வில்லை என்றே முடித்திருக்கிறீர்கள். நீங்கள் எழுதியதில் வருத்தமில்லை. கற்றுக்கொள்ள இடம் இருக்கிறது என்ற புரிதலை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் என் எழுத்துமுறைமீது ஒரு சந்தேகம் வந்துவிட்டது.
இதற்கு முன்பு இக்கதையை பலர் பாராட்டி பேசி எழுதியபோதும் அதில்நிகழாததைப் பற்றி ஒருவர்கூட சொல்லவில்லை என்பது என் குழப்பத்தை அதிகரிக்கிறது. உண்மையில் நீங்கள் சொன்னதை நினைவில்வைத்து எழுதும்போது கவனம் கொண்டு எழுதியிருந்தேன். அந்த நினைவுகள்/நிகழ்வுகள் இந்த கதையில் சரியான தளத்தில்தான் இருக்கிறது என்றே நினைத்திருந்தேன்.

 

மிக்க நன்றி.
கே.ஜே.அசோக்குமார்.

 

அன்புள்ள அசோக் குமார்

 

குழப்பம் நல்லதுதான். நீங்களே உங்களைக் கண்டுகொள்ளமுடியும்

 

ஜெ

 

கே ஜே அசோக்குமார் படைப்புக்கள்

 

 

===================================================================

சிறுகதைகள் என் பார்வை -1

சிறுகதைகள் என் பார்வை 2

சிறுகதைகள் என் பார்வை 3

சிறுகதைகள் என் பார்வை 4

சிறுகதைகள் என் பார்வை 5

==============================================================================

சில சிறுகதைகள் 6 அனோஜன் பாலகிருஷ்ணன் கலைச்செல்வி சதீஷ்குமார்

சில சிறுகதைகள் 5 மோனிகா மாறன், தருணாதித்தன்

சில சிறுகதைகள் 4 – தூயன், மகேந்திரன், கே ஜே சோக் குமார்

சில சிறுகதைகள் 3  மாதவன் இளங்கோ சிவா கிருஷ்ணமூர்த்தி

சில சிறுகதைகள் 2 காளிப்பிரசாத் சுனீல் கிருஷ்ணன்

சில சிறுகதைகள் 1 – ராம் செந்தில் உதயன் சித்தாந்தன்

==============================

சிறுகதை விமர்சனம் 1

சிறுக்தை விமர்சனம் 2

சிறுகதை விமர்சனம் 3

சிறுகதை விமர்சனம் 4

சிறுகதை விமர்சனம் 5

சிறுகதை விமர்சனம் 6

சிறுகதை விமர்சனம் 7

சிறுகதை விமர்சனம் 8

சிறுகதை விமர்சனம் 9

சிறுகதை விமர்சனம் 10

சிறுகதை விமர்சனம் 11

சிறுகதை விமர்சனம் 12

சிறுகதை விமர்சனம் 13

சிறுகதை விமர்சனம் 14

 

 

 

முந்தைய கட்டுரை’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 38
அடுத்த கட்டுரைமகாக்ரோத ரூபாய…. – கடலூர் சீனு