ஜெ
இடதுசாரிகளின் அரசியல் பற்றி எழுதியிருந்தீர்கள். கேரளத்தின் கோ ஆபரேட்டிவ் வங்கிகள் பணம் பெற்றுக்கொண்டு புதிய ரூபாய்நோட்டுக்களை அளிக்கக்கூடாது என்று ரிசர்வ் வங்கி தடைசெய்திருக்கிறது. இதற்கு எதிராக அவர்கள் தெருவுக்கு வந்து போராடுகிறார்கள். அதை மோடி ஏழைகளுக்குச் செய்த மிகப்பெரிய அநீதியாக இங்கேகூட பிரச்சாரம் செய்கிறார்கள்
இந்தச்செய்தியை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன்
- இந்த வங்கிகள் எப்போதுமே கள்ளப்பணத்தை வைப்புத்தொகையாக எடுத்துக்கொள்பவை. டிடிஎஸ் பிடித்தம் இல்லை. பேன் கார்டே கேட்பது இல்லை. வருமானவழி பற்றிய தகவலே இல்லை
- ஆகவே இவை கேரளத்தின்ஸ்விஸ் வங்கி என அழைக்கப்படுகின்றன
- 2009 முதலே இந்த வங்கிகளைப்பற்றி ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது
- நோட்டு மாற்றம் பற்றிய செய்திவந்ததுமே பழையநோட்டுக்கள் கோடிக்கணக்கில் பின்தேதியிடப்பட்டு டெபாசிட்டுகளாக இந்த வங்கிகளில் பெறப்பட்டன.2500 கோடி ரூபாய் அளவுக்கு பெறப்பட்டிருக்கும் எனச்செய்தி. அதுவும் ஓரிருநாட்களில். அதன்பின்னர்தான் ரிசர்வ் வங்கி இந்த வங்கிகளைஅடையாளம் கண்டுகொண்டு இவர்கள் பழையநோட்டு மாற்றுவதைதடைசெய்தது. புதியநோட்டுகளை அனுப்புவதையும் நிறுத்தியது
- அசாதாரணமாக இரண்டுநாளில் 2500 கோடியை வெள்ளையாக ஆக்கியவர்கள் யார்?
- இவர்கள் இன்னமும் கணிப்பொறியை பயன்படுத்துவதில்லை. இவ்வளவுபெரியதொகைகள் இன்னும் கையால் எழுதப்படும் பேரேடுகளிலேயே எழுதி பெறப்படுகின்றன
- இவர்களிடம் கள்ளநோட்டு அடையாளம் காணும் இயந்திரங்கள் இல்லை
- இவர்களின் ஊழியர்கள் வங்கிப்பணிப்பயிற்சிபெற்றவர்கள் அல்ல
- இந்த வங்கிகள் 90 சதவீதம் இடதுசாரிகள் கட்டுப்பாட்டில் உள்ளன.
- ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இல்லாமலேயே இவை ஒரு சமாந்தர வங்கி இயக்கமாகச் செயல்பட்டு வருகின்றன. கிராமப்புறக் கடன்கொடுக்கும் நிறுவனங்கள்தான் கூட்டுறவு வங்கிகள். ஆனால் கேரளத்தில் மட்டும் இவை பலகோடி ரூபாய்க்கு வைப்புநிதி வைத்துள்ளன
இதனால்தான் இந்த எதிர்ப்பு. அந்த மாநில முதல்வரே தெருவில் நின்றுபோராடுகிறார். டெல்லிக்குச் சென்று நிதியமைச்சரிடம் கோரிக்கைவைக்கிறார். ஏழைகளுக்கு எதிரான போர் என்கிறார்.இவர்கள் ஏன் கத்துகிறார்கள் என்று இன்னுமா புரியவில்லை?
மகாதேவன்
Kerala will bear the biggest brunt of demonetisation: Cooperative banks gasping for breath