கடிதங்கள்

பிரியமுள்ள ஜெமோ உங்கள் இந்த விமரிசனத்தில் கதை வடிவை அழகாய் அலசி இருக்கிறீர்கள். நடந்து முடிந்த ஒரு காலக்கட்டத்தை ஒரு சில பாராக்களில் அல்லது ஒரு பக்கத்தில் சுவையாக, சுருக்கமாக சொல்வது சிறுகதைகளில் ஒரு சவாலான விஷயம். திஜாவிற்க்கு அது piece of cake! இந்தக்கதையிலும் அவர் லாவகமாக கையாண்டிருப்பார்! சாமநாதுவின் முன் கதை சுருக்கத்தை, பல வருட புராணத்தை, அவர் காவிரியிலிருந்து குளித்து கல்யாண வீட்டிற்க்கு வருவதிற்குள் நமக்கு அழகாக அறிமுகப்படுத்தி, நம்மை -கல்யாண நாள் மற்றும் நடக்கப்போகிற சம்பவத்திற்கு தயார்ப்படுத்தி விடுவார்! இதற்கு இன்னோரு உதாரணம் அவரது ‘ஆரத்தி’ உங்களின் தளத்தை regular-a படித்து வருகிறேன், நிறைய விஷயங்களைப் பற்றி (நன்றாக தெரிந்த, சுமாராக தெரிந்த) எழுதி விமரிசன மேடையில் வைக்கிறீர்கள்…but விளையாட்டைப் பற்றி படித்ததாக நியாபகமில்லை… வியர்வை சொட்ட, சொட்ட விளையாடும் பழக்கம் மனதையும், உடலையும் ஆரோக்கியமாய் வைக்கும் என்பது என் எண்ணம். Essex சிவா அன்புள்ள சிவா கால்சட்டை போட்ட காலத்தில் கபடி ஆடியதோடு சரி. எனக்கு எந்த விளையாட்டிலும் ஆர்வமும் இல்லை அறிமுகமும் இல்லை. கிரிக்கெட் என்றால் என்னவென்றே தெரியாது. ஜெ அன்புள்ள ஜெயமோகன், உங்கள் ‘பின் தொடரும் நிழலின் குரல்கள்’ எனக்கு மிகவும் பிடித்த நாவல்களில் ஒன்று.இரண்டு முறை பிரியமுடன் வாசித்தேன். கதைக்குள் கதை என வித்தியாசமான பிண்ணனி என்னை மிகவும் கவர்ந்தது. உங்கள் உள்ளிருந்த சொல்ல முடியாத அவஸ்த்தைகளை அழகாக வெளிப்படுத்தி இருந்தீர்கள். உங்களுக்கு கிடைத்த அவஸ்த்தைகளும், ரிலீஃப் எங்களுக்கும் கிடைத்தது. நீங்களே அதைப் போன்று இன்னொரு நாவல் எழுதுவீர்களா என்பது சந்தேகம் தான். அன்புடன், ஒ.நூருல் அமீன் அன்புள்ள நூருல் அமீன், நன்றி பின் தொடரும் நிழலின் குரலில் என்னுடைய நேரடி அனுபவம் என ஏதுமில்லை. அது நான் உணர நேர்ந்த பிறரின் அனுபவம் மட்டுமே ஜெ அன்புள்ள ஜெயமோகன், உங்கள் பதிலுக்கு நன்றி! உங்கள் சொந்த அனுபவம் என நானும் நினைக்கவில்லை. நீங்கள் பிறர் அனுபங்களிலிருந்து கிடைத்த சாரத்தை உட்கிரகித்து தன்மயமாக்கி அதே நேரத்தில் உங்கள் அனுபவம் இல்லாததால் சற்று தள்ளி நின்று தன்னில் வாங்கியதை நீங்கள் உற்று பார்த்து பல்வேறு தர்கங்களாய் வெளிப்படுத்தி இருந்த அழகு. அவஸ்த்தை இல்லாமல் இத்தனை அழகு வருமா என தெரியவைல்லை. உங்கள் அலைவரிசையில் கொஞ்சம் ஒருங்கிணைந்த போது எனக்கு நேர்ந்ததை சொன்னேன். ஒ.நூருல் அமீன் ஆம் அது உண்மைதான். ஏதோ ஒருவகையில் நாம் கொள்ளும் உறவே கலையை உருவாக்குகிறது ஜெ அன்புள்ள ஜெ அண்ணா, கோதையின் மடியில் படிக்க ஆரம்பத்ததில் இருந்து மனம் ஏனோ கனமாக உணர்கிறேன்.வேறொன்றுமில்லை கோதையின் மடியில் தங்களுடன் பயனித்து, உரையாடியவர்களை பார்த்து வயிற்றெரிச்சல் தான்.அதுவும் அக்குழுவில் எங்கள் ஊர்கார்ரகள்(கொங்கு) அதிகமாக இருப்பது கூடுதலாக கனக்கிறது .தங்கள் எழுத்திலேயே மனம் ஒன்றவில்லை போங்க.தங்களின் அண்மையிலிருந்து உள்வாங்கும் அனுபவத்தை தங்களின் எழுத்தே கொடுக்க முடியாது என்பதே என் அனுபவம் .அதுதான் என் மனம் கனப்பதற்கு காரனம். மனக்கனம் குறைந்தபின்தான் படிக்கவேண்டும். சிவக்குமாரசாமி, திருப்பூர். அன்புள்ள சிவக்குமாரசாமி அடுத்த பயணத்தில் சந்திக்கலாமே. பயணங்கள் எப்போது இருக்கும் ஜெ அன்புள்ள ஜெ, என் நண்பர் நட்பாஸ் சொல்வனம் சென்ற இதழில் வெளியான மாயவன் இந்திரன் என்பவரின் கவிதைக்குக் கிடைக்காத அங்கீகாரம் குறித்துக் குறைபட்டு தன் தளத்தில் எழுதியிருந்தார். இதே கவிதை குறித்து என் தளத்திலும் தான் ரசித்ததை ஒரு விருந்தினர் பதிவாக நட்பாஸ் முன்னமே மனிதர்களுக்கானக் கடவுள் எழுதியிருந்தார். எந்திரனின் பரபரப்பில் இந்திரன் கண்டு கொள்ளப்படாத வருத்தமோ என்னவோ அவருக்கு. நானும் அவ்வாறுதான். நான் இதுவரை என் தளத்தில் எழுதியதில் ஆகச் சிறந்ததாக “ஒரு தற்காலிகப் பிரிவு” என்னும் இடுகையை நானே கிரீடம் சூட்டிக் கொண்டாடிக் கொண்டிருந்தேன். எனினும் அந்த இடுகைக்கு அப்படியொன்றும் வரவேற்பில்லை, நேற்றுவரை. சினிமா, அரசியல் குறித்த என் பார்வைகளுக்குக் கிடைத்த வரவேற்பு நான் கொண்டாடிய ஒரு பதிவிற்கு இல்லையே என நான் நினைத்ததும் உண்டு, அதுவும் நேற்று வரை. அந்த இடுகையை நான் எழுதி பத்து மாதங்களுக்குப் பிறகு இன்று உங்கள் தளத்தில் உங்கள் புன்முறுவலோடு வெளியான அந்த இடுகைக்கான பரிந்துரைப் பதிவைப் படித்தேன். எப்படித்தான் தேடிக் கண்டு பிடித்துப் படித்தீர்களோ என எனக்கே வியப்பாயுள்ளது. தங்கள் பரிந்துரை இடுகையை எனக்குக் கிடைத்த ஒரு விருதாய் நான் கொண்டாடுகிறேன். நன்றிகள் பலப்பல. அன்புடன், கிரி http://sasariri.com அன்புள்ள கிரி பொதுவாக சினிமா அரசியல் சார்ந்த குறிப்புகள் அளவுக்கு பிற எழுத்துக்கள் கவனிக்கப்படுவதில்லை. நம் ஜனங்களுக்கு சினிமா பற்றி மட்டுமே ஆர்வம். அதில் மட்டுமே அவர்களுக்கு தொடக்கம் இருக்கிறது ஆனால் அதற்காக நாம் வாழ்க்கையை எழுதாமலிருக்க முடியாதல்லவா? உங்கள் கட்டுரையை நான் கண்டுபிடித்ததே அம்மாதிரி எழுத்துக்கள் முக்கியமானவை என்பதற்கான சான்றல்லவா? ஜெ

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா -2010 கோவையில்
அடுத்த கட்டுரைதீபாவளியும் சமணமும்:கடிதம்