அழகிரிசாமியின் ராஜா

மெய்ஞானத்தையும் கனிந்த விவேகத்தையும் குழந்தைகளைக்கொண்டு சொல்லவைக்கும்போக்கு இந்திய இலக்கியத்தில் உண்டு. குழந்தையும் தெய்வமும் ஒன்று என்ற எண்ணத்தின் விளைவு அது. குழந்தை மனிதர்களின் கசடுகள் தீண்டாமல் கடவுளின் கையில் இருக்கிறது என்ற நம்பிக்கை உலகமெங்கும் உள்ளது. தேவதைகளை குழந்தைகளாக உருவகித்தது மேலைமரபு. தெய்வங்களேகூட குழந்தை வடிவில் வழிபடப்பட்டன. குழந்தை ஏசு ஐரோப்பாவெங்கும் பிரபலம். குருவாயூர் கிருஷ்ணனும் உடுப்பி கிருஷ்ணனும் கைக்குழந்தைகள். முருகன் அழகிய சிறுவன்.

அழகிரிசாமியின் இந்தக்கதையில் அபாரமான ஒரு மெய்ஞானம் குழந்தைவாயில் இருந்து வருகிறது. ஆனால் அதற்காக ஆசிரியர் எந்த முயற்சியும் செய்யவில்லை. சற்றும் செயற்கைத்தன்மை இல்லை. சர்வசாதாரணமான சித்தரிப்பு மிக எளிதாக அந்த உச்சத்தில் ஏறி அமர்ந்துகொள்கிறது- தவழும் குழந்தை தும்பியாக மாறி பறக்க ஆரம்பிப்பதுபோல ஒரு அற்புதம். என்னுடைய இலக்கிய முன்னோடிகள் வரிசை விமர்சனநூல்களில் தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த எட்டு கதைகளின் வரிசையில் இக்கதையையும் சேர்த்திருக்கிறேன்.

இக்கதையில் உள்ள தடையற்ற ஒழுக்கு, நலுங்காத இயல்புத்தன்மை, தானாகவே பார்த்துச்சிரித்து கைநீட்டி ஒக்கலில் ஏறிக்கொள்ளும் குழந்தைபோல ஆசிரியனிடம் கூடும் மெய்ஞானம் ஆகியவையே அழகிரிசாமியின் தனித்தன்மைகள்

ராஜாவந்திருக்கிறார்

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைதெருவெனும் ஆட்டம்