வெண்முரசின் ஒலிவடிவம்

8

அன்புள்ள எழுத்தாளருக்கு…

முன்பொரு முறை (இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு..!) சொன்னது போல், வெண்முரசு நாவல்களை வாசித்து வாசித்து ஒலிப் பதிவுகளாகச் செய்து  யூட்யூபில் இணைத்துக் கொண்டிருக்கிறேன். கிராதமும் நீலமுமாகத் தொடங்கியிருக்கிறேன்.

நீங்கள் ஒரு அத்தியாயத்தையாவது கொஞ்சமாவது கேட்டுப் பார்த்து பின்னூட்டம் சொன்னால் சரி படுத்திக் கொள்ள முடியும்.

கிராதம் – 15:

https://www.youtube.com/watch?v=cUCEBgqTxek

எனக்கே இரு குறைகள் தெரிகின்றன.

அ. வாசிக்கும் வேகம். இதைத் தற்போது குறைத்து ஒவ்வொரு அசையாகப் பேசிப் பதிகிறேன்.

ஆ. ல, ள உச்சரிக்கும் வேறுபாடு. இது, படிக்கும் போதே தவறு செய்கிறோம் என்று இன்னொரு கிளிமனம் உணர்கின்றது. இதை விரைவில் சரி செய்து கொள்கிறேன்.

நன்றிகள்,

இரா.வசந்த குமார்.

*

அன்புள்ள வசந்தகுமார்

அதை நான் சொல்லக்கூடாது. பயனாளிகள்தான் சொல்லவேண்டும்

நல்லமுயற்சி, வாழ்த்துக்கள்

ஜெ

முந்தைய கட்டுரைவீட்டைக் கட்டிப்பார்
அடுத்த கட்டுரைசிறுகதைகள் கடிதங்கள் 16