கிராதம் பற்றி

Kiratarjuniya

ஜெ,

சொல்வளர் காடு முடிந்ததில் இருந்து என்று என்றென காத்திருந்ததை இன்று கண்டேன். எப்பொழுதும் வெண்முரசு நாவலுக்கான தலைப்பு தரும் எந்தவித உணர்வெழுச்சிகளும் சில நொடிகளுக்கு மேல் நிலைக்கவில்லை. அதன் காரணம் தலைப்பு ஒரு சமஸ்கிருத சொல் என்பதே.வெண்முரசின் சொல்லழகியலில் முக்கியமானது, பலரையும் கவர்வது அதன் தமிழாக்கச் சொற்கள் தான் என நினைக்கிறேன். என் மனதில் உறுத்துவது ‘கிராதம்’ தமிழ்ச் சொல்லா? அல்லது குறியீட்டு ரீதியில் சமஸ்கிருத சொல் தான் இந்நாவலுக்குத் தேவையா?

அன்புடன்,
செந்தில்நாதன்

அன்புள்ள செந்தில்நாதன்

உண்மைதான்.

வெண்முரசு எழுதும்போது நான் கொண்ட தன்னெறிகளில் ஒன்று கூடுமானவரை தனித்தமிழ் என்பது. அதுவே இதுவரை கடைப்பிடிக்கப்பட்டது. விதிவிலக்கு பிரயாகை, காண்டீபம்

கிராதம் என்னும் சொல்லுக்கு தமிழில் காட்டுத்தன்மை என்னும் பொருள் வரும். ஆனால் ஒலியமைவில் அச்சொல் எனக்கு இயைந்துவிட்டது.

அதற்கு தர்க்கம் ஏதுமில்லை. சொற்களைத் திரும்பத்திரும்பச் சொல்லி போதையேற்றிக்கொண்டு அதிலிருந்தே பிம்பங்களை அடைவது என் வழக்கம்.

ஆகவே வேறு வழியில்லை. இச்ச்சொல்லைத்தொடர்வதுதான்.

ஜெ

முந்தைய கட்டுரைபெருந்துயர் நோக்கி – பின் தொடரும் நிழலின் குரல் குறித்து
அடுத்த கட்டுரைபொதுவழியின் பெரும்சலிப்பு