காந்தி கடிதங்கள் -3

சமீபத்தில் காந்தி குறித்த தங்களுடைய காணொளியைக் கேட்டேன். கருத்துகள் இந்தளவுக்கு சுருக்கமான வடிவில் மற்றும் கால அளவில் அமைவது மனதில் ஆழமாகப் பதிய உதவுகிறது என்பதை ஒரு இணையதள பயனாளனாக தங்களிடம் தெரிவிக்க விரும்புகிறேன்.

நான்கைந்து மாதங்களுக்கு முன்பு இணையத்தில் எதனையோ தேடும்போது தங்களுடைய தளம் அறிமுகப்பட்டது. அதன்பின்னர், குறிப்பாக எந்த நோக்கமும் இல்லாமல் தளத்தின் சில பதிவுகளை வாசிக்க ஆரம்பித்தேன், தங்களுடைய பெயர் மற்றும் இலக்கியம் என்ற வார்த்தை ஏற்கெனவே பரிச்சயப்பட்டிருப்பது தாமதமாக நினைவில் தட்டுப்பட்டது. கருத்துகளின் மீதான ஆர்வத்தினால் தொடர்ந்து பதிவுகளை வாசிப்பது இன்றுவரை பழக்கமாகவே மாறிவிட்டது.

தர்க்கரீதியிலும் உணர்வுரீதியிலும் மிகவும் திருப்தியாக உணர்கிறேன்; என்னிடம் ஆரோக்கியமான குழப்பங்களையும் செயலில் மாற்றங்களையும்கூட கவனிக்கமுடிகிறது. நேர்மையுடனான பிணைப்பு பலமாக இருக்கும்போது ஒருவருடைய ஒரு கருத்தோ அல்லது செயலோ எந்தளவுக்கு இன்னொரு மனிதரை சிந்திக்க வைக்கிறது அல்லது செயல்படவைக்கிறது என்கிற பிரமிப்புதான் இந்த – குறிப்பிட்ட காரணங்கள் ஏதுமல்லாத – நன்றி தெரிவிக்கும் கடிதத்தை தட்டச்சு செய்யவைத்தது. நன்றி!

அன்புடன்,

ரமேஷ் குமார்

கோயம்புத்தூர்

முந்தைய கட்டுரைஇருத்தலின் இனிமை
அடுத்த கட்டுரைவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 2