இன்று விஷ்ணுபுரம் இலக்கிய முகாமின் முதல்நாள். காலையில் ஏழுமணிக்கு எழுந்து சில குறிப்புகளை எடுத்துக்கொண்டு உடனே கிளம்பி அரங்குக்குச் சென்றேன். செந்தேஸாவில் தங்கியிருந்த கும்பலும் வந்தது. அரங்கிலேயே காலைச்சிற்றுண்டி. ஒன்பது மணிக்கு நிகழ்ச்சி.
மாலை ஐந்துமணிக்கு நண்பர்களுடன் கிளம்பி கடலோர செயற்கைப்பூங்கா. மானுடனின் கலைத்திறமும் இயற்கையின் அற்புதங்களும் கலந்த ஓர் அழகிய