படைப்பாளியின் துயர் -கடிதங்கள்

images

ஜெ

 

இன்று உங்களின் ”ஆல் படித்”தேன்.  சொல்வளர் காட்டில் நீங்கள் சொல்லியிருப்பது போலவே மரங்கள் வேறு வேறுதான் எனினும் மண் ஒன்|றேதான் . துயரமுற்றவர்கள் இல்லாத இடம் ஏது? அடுத்தவனின் துயரை அறிந்துகொள்பவர்களே குறைவு

 

மனைவி சொன்னதை நம்பாவிட்டாலும் தம்பியை வெளியேற்றுவதற்காக அடித்துக்கொண்டேயிருந்த அந்த அண்ணனின் துயரும் தெரிகிறது இதில்எத்தனை சிக்கலானது இந்த வாழ்வும் உறவுகளும்?.

 

அந்த காரக்குழம்புடன் தக்காளிச்சோறு என் நெஞ்சில் அடைத்துக்கொண்டது நீங்கள் சாப்பிடுகையில்.
துயரம் கொண்டவர்கள்  மட்டுமல்ல துயரில் துணை நிற்பவர்களும், துயரைப்பங்கு போட்டுக்கொள்பவர்களும்   எங்கும் இருக்கிறார்கள் .

மனசு கனத்துக்கிடக்கிறது

 

அன்புடன்

லோகமாதேவி

 

அன்புள்ள லோகமாதேவி,

ஒரு நிகழ்வானாலும் இருபக்கமும் அதில் இருக்கிறது. ஔவை சொன்னதுபோல இட்டார் இடாதார். அண்ணன் முதல்வகை. ஆனால் அதுகூட தம்பியின் இயல்பை மாற்ற முடியவில்லை. ஏனென்றால் அவர் ஆல்

 

ஜெ

 

ஜெ  அவர்களுக்கு,
சமீப காலமாக இளம் வயதில் பல எழுத்தாளர்களுக்கு மரணம் ஏற்படுவது பற்றி  தாங்கள் எழுதி இருந்தீர்கள். படைப்பாற்றலும் உணர்வு ரீதியான துன்பங்களும் பிரிக்க  முடியாதது என்பது முற்றிலும் உண்மை.
இந்தத் துன்பத்திலிருந்து ஒரு படைப்பாளி எப்படித் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றி கீழே உள்ள கட்டுரை விவரிக்கிறது.
இது நடைமுறையில் சாத்தியம் தானா என்பது பற்றித் தங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்.
சத்திஷ்
அன்புள்ள சதீஷ்
சுவாரசியமான கட்டுரை
ஆனால் சிக்கல் என்னவென்றால் படைப்பாளிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகை. அவர்களின் பிரச்சினைகளும் அப்படித்தான். பொதுமைப்படுத்தாமல் நாம் தீர்வுகளை யோசிக்கமுடியாது. பொதுமைப்படுத்தினால் அதற்கு வெளியே நிற்பவனே எழுத்தாளன்
மேலும் எழுத்தாளர்களுக்கு எல்லாமே தெரியும். பிறர் ஆலோசனை, வழிகாட்டுதல் அளிக்கவேண்டிய நிலை எழுத்தாளனுக்கு இல்லை. ஓர் எழுத்தாளனுக்கு வாழ்க்கை, மனம் சார்ந்த  ஆலோசனை வழங்குபவன் உண்மையில் அவரது எழுத்தை வாசிக்காதவன், வாசித்தாலும் புரியாதவன்.
தன் ஞானத்தை தனக்குப்பயன்படுத்திக்கொள்ளமுடியாதவனாகவே எழுத்தாளன் இருப்பான். இதுதான் சிக்கல்
ஜெ
முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 60
அடுத்த கட்டுரைபரப்பிலக்கியம்- இலக்கியம்