சிங்கப்பூர் காவியமுகாம்

index

நண்பர்களே

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் பல வருடங்களாக இலக்கிய முகாம்களை தொடர்ந்து நடத்திவருகிறது. இச்சந்திப்புகள் புதிய படைப்பாளிகளை பங்கேற்கச் செய்து அறிமுகப்படுத்துவதாகவும், இலக்கிய ரசனையை மேம்படுத்துவதாகவும், மரபிலக்கியத்தை தொடர்ந்து அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்துவதாகவும் அமைகின்றன.

2010ம் ஆண்டில் இருந்து விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில் “ஊட்டி காவிய முகாம்” என்ற தலைப்பில் தொடர்ந்து ஒவ்வொருவருடமும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருட விஷ்ணுபுரம் காவிய முகாம் சிங்கப்பூரில் இந்த மாதம் (செப்டம்பர்) 17,18 சனி,ஞாயிறு கிழமைகளில் நடைபெற இருக்கிறது.

இந்தியாவில் இருந்து முப்பதுக்கும் மேற்பட்ட இலக்கிய ஆர்வலர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட 25 கவிதைகள் வழியாக கம்பராமாயணத்தின்அழகை எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பேச இருக்கிறார்.

எழுத்தாளர் சு வேணுகோபால், எழுத்தாளர். எம்.கோபாலகிருஷ்ணன் (சூத்ரதாரி) போன்றவர்கள் பங்கு கொள்கிறார்கள்

இதுதவிர சிறுகதை, நாவல் மற்றும் கவிதை பற்றி தனித்தனி அமர்வுகளும் அதை தொடர்ந்த விவாதங்களும் நடைபெறும்.

இறுதி நாளில் நாஞ்சில் நாடன், சு வேணுகோபால், எம் கோபாலகிருஷ்ணன் படைப்புகள்பற்றி அவர்களுடனான உரையாடல் நிகழ்வு நடைபெறும்.

மொத்தமாக ஐம்பது பேர்களுக்கு மட்டுமே அனுமதி என்பதால் முதலில் பதிவு செய்பவர்களுக்கே வாய்ப்பளிக்கும் கட்டாயத்தில் இருக்கிறோம்.

நிபந்தனைகள்

  1. சந்திப்பு நிகழும் இரண்டு நாட்களும் வரவேண்டும்.
  2. வரக்கூடியவர்கள் எல்லா அமர்வுகளிலும் முழுமையாகப் பங்கேற்க வேண்டும்.
  3. வரவிரும்புகிறவர்கள் [email protected] என்னும் மின்னஞ்சலுக்கு தங்களைப்பற்றிய தகவல்களுடன் தெரிவித்தால் அழைக்கப்படுவார்கள். அழைக்கப்படாதவர்களுக்கு அனுமதி இல்லை. அனுமதி இல்லாமல் எவரையும் கூட்டி வரக்கூடாது.
  4. தொடர்பு கொள்பவர்களுக்கு முகாமின் தேவைகளைப்பற்றி தகவல் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்
  5. பதிவு செய்தபின் வர இயலாத சூழல் நேர்ந்தால் முன்னதாக தகவல் தெரிவிக்கவேண்டும். காத்திருப்பவர்களை அழைக்க ஏதுவாகும்.

முகாம் நடைபெறும் இடம்: Management Development Institute of Singapore (MDIS), Queens Town, Stirling Rd, Singapore

முகாம் நடக்கும் இரண்டு நாட்களுக்கும் காலை மற்றும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புக்கு [email protected]

இப்படிக்கு

சரவணன் விவேகானந்தன்

சிங்கப்பூர்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 52
அடுத்த கட்டுரைஇரு இணைப்புகள்