கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் ஐயாவுக்கு
கங்கை கொண்ட சோழபுரம் சென்று வந்ததைப் படித்தேன்.

அதன் அருகில் எங்கள் வயல்வெளிகள் உள்ளன.ஒரு ஏக்கர் கோயில் நிலம் நாங்கள் பயிர் செய்கின்றோம்.
ஒருநாள் மண்டகப்படி நாங்கள் சொய்ய வேண்டும்
அதுபோல் 365 நாளுக்கும் மண்டகப்படி செய்ய 365 ஏக்கர் நிலம் உள்ளது.
அது தவிர தேவடியாள் மானியம்,மேளக்காரன் மாணியம் என நிலம் பலருக்கு உள்ளது. எங்கள் ஊர் தாங்கள் சென்ற மாளிகை மேட்டிலிருந்து இரண்டுகல் தொலைவுதான்.இடைக்கட்டு என்பது. சிற்றூர்.அருகில் உள்கோட்டை.நான் பத்தாம் வகுப்பு வரை படித்தது.
வீராணம் சென்ற வழியில் இருந்த மீன்சுருட்டியில்தான் நான் + 2 படித்தேன்.

தாங்கள் செல்வது தெரிந்திருந்தால் அண்ணன் கோமகன் (பொறியாளர்) அவர்களைக் காணும்படி சொல்லியிருப்பேன்.
தங்களைக் கண்டு அவரும் மகிழ்ந்திருப்பார்.கோயிலுக்கு வடக்கே 50 மீட்டருக்குள் அவர் வீடு. இஞ்சினியர் வீடு என்றால் குழந்தைகள் கூட சொல்வார்கள். கணக்கவிநாயகர் கோயில் கோயிலுக்கு தென்மேற்கே உள்ளது. பார்த்தீர்களா? அரிய விநாயகர் சிலை உள்ளது. நடந்து செல்லலாம்.

கங்கைகொண்ட சோழபுரம் சென்ற தாங்கள் அருகில் உள்ள செங்கல்மேட்டுக் காளிக்கோயில், இடைக்கட்டு பிடாரி அம்மன்கோயில்,வீராரெட்டித்தெரு காளி,அழகர்கோயில் ஆனை இவற்றைப் பார்த்து வந்திருக்கலாம்.இங்கெல்லாம் சாளுக்கிய சிற்பங்கள் உள்ளன. நான் சில பதிவுகள் போட்டுள்ளேன்.
தங்கள் வழியாகப் பலருக்குத் தெரியட்டும் என்று இணைப்பு கொடுத்துள்ளேன். கண்டு மகிழுங்கள்.

கீழுள்ள கட்டுரையில் நான்கு இணைப்புகள் உள்ளன.
http://muelangovan.blogspot.com/2009/02/blog-post_03.html

http://muelangovan.blogspot.com/2008/12/blog-post_26.html மாளிகைமேடு

அடுத்த முறை வாருங்கள்.அருகில் உள்ள எங்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்வேன். 80 ஆண்டுகளுக்கு முந்திய எங்கள் தாத்தா கட்டிய வீடு.கோட்டையான் வீடு என்று கூறுவார்கள்.
இடிய விட்டோம். இப்பொழுது நான் தலைகிளம்பி பழைமை மாறாமல் புதுப்பித்துள்ளோம் கட்டாயம் தங்களுக்குப் பிடிக்கும்
64 உத்திரம் கொண்ட பெரிய வீடு. அனைத்தும் தேக்கு மரங்களும் பாலை மரமும் கொண்டது.

அம்மா மட்டும்தான் உள்ளார். கூட்டிப் பெருக்கவே முடியவில்லை.
வௌவால்கள் அரசாங்கம். ஊரில் இருப்பவர்கள் தொலைக்காட்சி பார்க்க இரவு வருவார்களாம். நாங்கள் புதுச்சேரியில் 3700 வாடகையில் கொசுக்கடியில் கிடக்கின்றோம். பிள்ளைகள் ஓடியாடி விளையாடப் புதுவையில் வசதி இல்லை.

வரும் நவம்பர் 18 தந்தையாரின் நினைவுநாள். ஆண்டுதோறும் குடும்பத்துடன் செல்வது உண்டு. அன்றுதான் எங்கள் வாண்டுகளுக்கு ஆகஸ்டு 15. மாலையில் தேடிப்பிடித்து காரில் திணித்துக்கொண்டு புதுவை திரும்புவோம். பகல் முழுவதும் ஆடிய ஆட்டத்தில் தூங்கிவிடுவார்கள். புதுவை வந்தும் அவர்கள் தூக்கத்தைக் கலைக்கமுடியாது. அந்த அளவு ஆடி அசந்துபோவார்கள்.

அன்புள்ள
மு.இளங்கோவன்
புதுச்சேரி

அன்புள்ள இளங்கோவன்

உங்கள் கட்டுரைகளை வாசித்திருக்கிறேன். குறிப்பாக உங்கள் வீட்டை நீங்கள் புதுப்பித்தது நன்றாகவே நினைவிருக்கிறது.  கங்கை கொண்டபுரத்தில் நிற்கையில் உங்களை நினவு கூர்ந்தேன்.சொல்லவும் செய்தேன்

மீண்டும் செல்லும்போது பார்ப்போம்

ஜெ

Dear Mr.Jeyamohan,
Recently I came across a website on Mind maps.
http://www.mindmapping.com/Theory_Behind_Mind_Maps.htm
http://www.mind-mapping.co.uk/
After going through that I realize the technique is almost similar to the ‘Chakras’ ‘Yantra’ & ‘mandala’ in Buddhism.
I wanted to share this thought with yourself, so that it will be helpful to many to develop ‘cortical skills’

Regards,
M.U.P.Sivakumar

அன்புள்ள சிவகுமார்

சக்கரங்கள் என்பவை அருவமான சக்தி மையங்களுக்கு அளிக்கப் பட்ட புறவயமான வடிவ உருவகங்கள். நீங்கள் குறிப்பிட்ட இணைப்பு சமானமாகவே வருகிறது

ஜெ

முந்தைய கட்டுரைதீபாவளியும் சமணமும்:கடிதம்
அடுத்த கட்டுரைகவி சூழுலா