கடிதங்கள்

திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்.

http://www.jeyamohan.in/?p=8869 என்ற இடுகையில் உங்கள் பதில் ஒன்று

“நான் மேலோட்டமாக பார்த்தேன். ஒன்றும் சொல்வதற்கில்லை. அவர்கள் என்னுடைய கட்டுரைகளை வாசிப்பவர்களாக இருந்தால் ஏற்கனவே வாசிப்புப் பழக்கம்
இருந்திருக்கும். அவர்கள் பேசும் விஷயங்களைப்பற்றி ஏற்கனவே இங்கே விரிவாக
விளக்கப்பட்டமை அவர்களின் கவனத்துக்கும் வந்திருக்கும். அவர்கள்
தமிழகத்தின் பொதுப்புத்தித்தளத்தில் மட்டுமே நிற்பவர்கள். இங்கே
மேலோட்டமான மேடைப்பேச்சாளர்களே சிந்தனைகளை உருவாக்குகிறார்கள்”

1. நீங்கள் மேலோட்டமாகப் பார்த்தேன் என்று சொல்வதால், ஒரு தகவல்.
சுட்டியில் கொடுக்கப்பட்ட எனது வலைப்பதிவில் காந்தி குறித்து நடந்த
விவாதங்கள் நீங்கள் இணையத் தளத்தில் எழுதியதற்கு காலத்தால் முந்தியவை.
அதனால் அங்கே பேசியவர்கள் உங்கள் கட்டுரைகளை வாசித்திருத்தல்
சாத்தியமில்லை.
(http://masivakumar.blogspot.com/search/label/காந்தி)

2. மேலோட்டமாக மட்டும் பார்த்து விட்டு ‘தமிழகத்தின்
பொதுப்புத்திக்களத்தில் நிற்பவர்கள்’ என்று எப்படி சொல்கிறீர்கள்? முதல்
வாக்கியத்தில் மேலோட்டமாக பார்த்ததாகச் சொன்ன நீங்கள் கடைசி
வாக்கியத்தில், ‘மேலோட்டமான’ மேடைப்பேச்சாளர்க்ளே சிந்தனை
உருவாக்குகிறார்கள் என்று குறைபட்டுக் கொள்கிறீர்கள்!

(இதை பொதுவிலும் வெளியிடுகிறேன்)

அன்புடன்,

மா சிவகுமார்
கணிப்பொருள் – http://kaniporul.blogspot.com/
தமிழில் ஐலக்சி – http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc.tamil
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் – http://masivakumar.blogspot.com

அன்புள்ள சிவக்குமார்

சரிதான். நானும் மேலோட்டமாக எழுதுகிறேன் என நிரூபித்துவிட்டீர்கள். நன்றி))

ஜெ

ஜெயமோகன்,

நீர்நிலைகளில் பாசி அதிகமாக வளர்வதற்கு ஆக்சிஜன் காரணமல்ல. டிடர்ஜண்டுகள் ஆக்சிஜனை உருவாக்குவதுமில்லை. டிடர்ஜண்டுகளில் உள்ள பாஸ்ஃபேட்டே நீர்நிலைகள் அதீதமாக உரமிடப்படுவதற்கும், அதன் விளைவாக பாசிகள் அதிகமாவதற்கும் காரணம். வயல்களில் இடப்படும் உரங்களின் உபரியும் நீரில் கலந்து அந்த நீர் சென்று சேரும் நீர்நிலைகளை பாதிக்கின்றன. உயிரினக் கழிவுகளும் இன்னொரு காரணம்.

நமது பொது வெளிகளையும், நீர், நில ஆதாரங்களையும் பேணிவரும் தன்மை உண்மையாகவே கவலைக்குரியது. இதற்கு தீர்வு என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

விக்டர் சுரேஷ்

அன்புள்ள விக்டர்

தகவலுக்கு நன்றி.

நான் வாசித்த நினைவில் இருந்து சொன்னேன். ஆக்டிவ் ஆக்ஸிஜன் என்று விளம்பரங்கள் சொல்வது இதனுடன் குழம்பிவிட்டது போல))

முழுமையாகவே டிடர்ஜெண்டுகளை தடைசெய்ய முடியுமா? எந்த நாடாவது செய்துள்ளதா?

நன்றி

ஜெ

முந்தைய கட்டுரைநவீனத்தமிழிலக்கிய அறிமுகம்:கடிதம்
அடுத்த கட்டுரைதமிழிசை: காழ்ப்பே வரலாறாக…