நூல்கள்,கடிதங்கள்

அன்புள்ள ஜெ மோ..

காடு நாவல் படித்தேன்..

லைஃப் இஸ் ரிலேஷன்ஷிப் என்ற ஜெ கிருஷ்னமூர்த்தியின் தத்துவதின் அடிப்படையில் , மனிதன், சக மனிதனிஉடன் , இயற்கையுடன் எப்படி உறவு கொள்கிரான் என்பதை நாவல் அலசுகிரது என்பது என் புரிதல்..அதே போல காடு என்பதை குறியீடாக பயன்படுதி இருகிரீர்கள் என நினைக்கிறேன்..

மிளா வின் படத்தை அனுப்பி இருக்கிறேன்.. நீங்கள் சொல்லும் மிளா இதுதான? இதற்கு வேறு பெயர் இருக்கிறதா?
நாவலை பற்றி என் கருத்து இதில் இருக்கிறது

http://pichaikaaran.blogspot.com/2010/10/blog-post_28.html

அன்புள்ள பிச்சைக்காரன்

ஆம்…இதுவேதான். இது குட்டி. இன்னும் பெரிதாக இருக்கும். அந்த எடையுடன் அபாரமாக தாவும். எங்கள் ஊரின் ‘தேசிய’ மிருகம்

ஜெ

முந்தைய கட்டுரைமண்ணு வீசும் வாசனையும்…
அடுத்த கட்டுரைகாந்தளூர்ச்சாலையின் கலைஞன்