இன்று நண்பர்கள் சந்திப்பு

DSC_7057

இன்று என் குடியிருப்புக்கு தனிப்பட்ட முறையில் சந்திக்க விரும்பும் நண்பர்களை வரச்சொல்லியிருந்தேன். பத்துபேரை எதிர்பார்த்தேன். இருபதுக்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தனர்.இங்கெயே சற்று விசாலமான கூடமாக பார்த்திருக்கலாம். ஆனால் ஏற்பாடுகள் செய்வதெல்லாம் எனக்குச் சரிவராது. தமிழ்நாட்டிலேயே அதிகமான நிகழ்வுகள் ஒருங்கிணைக்கப்படுவது என் பெயரால். ஆனால் நான் எதையுமே இன்றுவரை செய்ததில்லை

DSC_7067

நண்பர் பரணி மதிய உணவு கொண்டுவந்திருந்தார். சாப்பிட்டுக்கொண்டிருக்கையிலேயே நண்பர்கள் வந்தனர். அனைவரையும் அமரவைக்க நாற்காலி இல்லை. சோபாக்கள் இரண்டு, நாற்காலிகள் நான்கு. அவ்வளவுதான் எஞ்சியவர்களை தரையில் அமரச்செய்தோம். சிங்கப்பூர் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் வந்திருந்தார்.  நண்பர் ஆமருவி தேவநாதன் அவர் எழுதிய ‘நான் ராமானுஜன்’ என்னும் நூலை கொண்டுவந்தார்

DSC_7065

மாலை ஏழரை மணிவரை, கிட்டத்தட்ட ஐந்துமணிநேரம் பேசிக்கொண்டிருந்தோம். அரசியல், இலக்கியம், புராணமரபு, தத்துவம்.கூடவே சிரிப்பு, கிண்டல். உற்சாகமான ஒரு நாளாக இருந்தது.பாதிப்பேர் கிளம்பிச்சென்றபின்புதான் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என்றே தோன்றியது. இனிய நாள் இன்று

 

மேலும் படங்கள்