கடிதங்கள்

0000d18767c977cdfd1d42122b1bfad6

ஜெ

எம்.டி.முத்துக்குமாரசாமியின் கட்டுரை வாசித்தேன். அவர் முகத்தில் இருக்கும் தேஜஸுக்கு இதுதான் காரணமா? நானும் என்னமோ ஏதோ என்று பயந்தே போய்விட்டேன்

ராஜசேகர்

***

அன்புள்ள ராஜசேகர்,

கேலி எல்லாம் செய்யக்கூடாது.ஆஸ்த்மா போன்ற நோய்களுக்கு தேஜஸ் ரொம்ப நல்ல மருந்து.

ஜெ

***

அன்புள்ள ஜெமோ

பத்மஸ்ரீயை மறுத்த ஜெமோ சிங்கப்பூர் அரசின் அழைப்பை ஏற்றது எப்படி என ஒருவர் ஆணித்தரமாக இணையத்தில் கேட்டிருந்தார். உங்கள் பதில் என்ன? [சும்மா தெரிஞ்சு வச்சுக்குவோமேன்னுதான்]

சுந்தர்

***

அன்புள்ள சுந்தர்,

பத்மஸ்ரீ கூட பணம் கொடுக்கப்படவில்லை.

பத்மஸ்ரீக்கு வசனம் எழுதக்கூப்பிட்டிருந்தால் மறுத்திருக்கமாட்டேன்

ஜெ

***

ஜெ,

பாரதிய ஜனதாவில் நுழையும் தலித்துக்கள் காமிரா இல்லாமல் பொட்டி வாங்க கற்றுக்கொள்ளவேண்டும் என நண்பன் சொல்கிறான். அதை பாஜகவே பயிற்சி கொடுக்கலாமே

மகாதேவன்

***

அன்புள்ள மகாதேவன்,

பொட்டி தூக்குவதைவிட மேல் என நினைக்கிறேன்

ஜெ

***

அன்புள்ள ஜெமோ

கபால்னு விழுந்து நீங்க கபாலிக்கு எழுதிய கண்ணீர் குறிப்பை வாசித்தேன். நல்ல சுத்தல். அப்படியே லிங்காவுக்கும் உரை ஒண்ணு எழுதலாம்ல? எம்டிஎம் எழுதியது வெண்முரசு மாதிரி ரொம்ப காவியமா இருக்கு.

ஜெ.எஸ்

***

அன்புள்ள ஜெ.எஸ்,

லிதுவேனிய இயக்குநர் Wellsley Michae எடுத்த Rofferty Calder என்கிற படம்தானே இது? நல்லவேளையாக அதைப்பற்றி நான் இன்னும் கேள்விப்படவில்லை

ஜெ

 

முந்தைய கட்டுரைதலித்துக்களும் பாரதியஜனதாவும்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 25