ஞானக்கூத்தனின் மறைவுச்செய்தி அறிந்து நானும் ராஜகோபாலனும் ஸ்ரீநிவாசனும் கிளம்பிசென்றோம். அலுவலகம் வந்த பின்பு செய்தியறிந்ததனால் விடுப்பு சொல்லி போகவேண்டியிருந்தது
பார்த்தசாரதி பெருமாள் கோயிலின் தேரடியருகே அவர் வீடு என்றாலும் தெரு பேரை வைத்து கண்டறிய தாமதமனது. வீட்டுக்கு அருகேயேதான் சுற்றிக்கொண்டிருந்தோம். அங்கிருந்த ஒருவரிடம் கேட்கலாம் என இறங்கியபோதுதான் அவர் எழுத்தாளர் பிரபஞ்சன் என உணர்ந்தேன். எஸ்ராமகிருஷணன், மனுஷ்ய புத்திரன், ஓவியர் ஸ்ரீநிவாசன், ‘மையம்’ ராஜகோபால், விஜயமகேந்திரன், வேடியப்பன் ஆகியோரும் ஏற்கனவே வந்திருந்தார்கள். இன்னும் பலர் வந்திருந்தாரகள்.
வீட்டினரின் சடங்குகள் முடிந்து அவர் வேனில் ஏற்றப்படுவதற்கு பதினைந்து நிமிடங்கள் முன்பு நாங்கள் சென்றிருந்தோம். ஜன்னல் வெப்டிவி வந்திருந்த இலக்கிய ஆளுமக்களிடம் ஞானக்கூத்தனின் நினைவை கேட்டறிந்துகொண்டிருந்தனர். மலர்மாலையை சாற்றி வணங்கி விடையளித்தோம்.
கலந்து கொண்டவர்கள் முப்பதிலிருந்து நாற்பது பேர்கள் வரை இருப்பர்கள்.
நண்பர்கள் பலர் இந்த செய்தியை அலுவலகம் வந்த பின்னரே அறிந்தார்கள் என்று தெரிந தது. அதனால் அவர்கள் வருவதற்குள புறப்பாடு ஆகியிருந்த்து. திருவல்லிக்கேணி நெரிசலான , குறுகிய சாலைகளும் பல குடித்தனங்கள் இருப்பதாலும் உடனே எடுத்ததாக வந்திருந்தவர் சொன்னார்.
காளி பிரசாத்