ரஷ்யப்பயணம் – எம்.ஏ.சுசீலா

1

 

அன்புள்ள ஜெ,

குற்றமும்தண்டனையும், அசடன் நாவல்களை மொழிபெயர்த்ததிலிருந்து தஸ்தயெவ்ஸ்கியின் மண்ணை.,.டால்ஸ்டாயின் பூமியை தரிசிக்க வேண்டும்…,.ரஸ்கோல்னிகோவும், அசடன் மிஷ்கினும் அவர்களின் எண்ணங்களோடும் கனவுகளோடும் சஞ்சரித்த இடங்களைக் காணவேண்டும் என்ற தீராத ஆசை! ,அதை நிறைவேற்றிக்கொள்ளும் தருணம் இப்போதுதான் கிடைத்திருக்கிறது. ரஷ்யப்பயணம் செல்கிறேன். மாஸ்கோ மற்றும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நோக்கி !.ஆறு நாட்கள், அற்புத அனுபவங்கள் வாய்க்கக்கூடும் என்ற தீராத கனவுகளோடு…

அன்புடன்

சுசீலா

***

அன்புள்ள சுசீலா,

என் நெடுநாள் கனவு ரஷ்யா. சமீபத்தில் லண்டன் சென்றபோது ஒன்றை உணர்ந்தேன். நான் புனைவுகளில் கண்ட லண்டன் அப்படியேதான் பெரும்பாலும் இருந்தது. சாலையில் ஜேன் ஆஸ்டினையோ ஜார்ஜ் எலியட்டையோ தாக்கரேயையோ பார்த்துவிடலாமென நம்பும் அளவுக்கு. நம் ஊர்கள் உருத்தெரியாமல் மாறுவதுபோல மேலைநாட்டு நகரங்கள் மாறுவதில்லை.

ரஸ்கால்நிகாஃபின், நெஃல்யுடோவின் நகரம். ராஸ்டோவின், பியரியின் ஆண்ட்ரூவின் மண். வாழ்க. நிறைவான அனுபவங்களுடன் மீண்டுவருக

ஜெ

முந்தைய கட்டுரைமகத்துவத்தின் கண்ணீர்- பின் தொடரும் நிழலின் குரல்
அடுத்த கட்டுரைகபாலிக்காய்ச்சல்