வெய்யோன் – வெண்முரசு நாவல் வரிசையில் ஒன்பதாவது நாவல்.கர்ணனைப்பற்றிய நாவல் இது.
848 பக்கங்கள் கொண்ட நாவல் இது. 40 வண்ணப் படங்களும் இந்நாவலில் உள்ளன.
செவ்வியல் என்பது அனைத்துவகையான புனைவுவகைகளுக்கும் உள்ளே இடமளிப்பது. அதன் இயல்பே தொகுப்புத்தன்மைதான். அதற்குள் ஒருமையையும் ஒத்திசைவையும் அது அடையமுயல்கிறது. அதன் மையத்தரிசனத்தால் அதை நோக்கிச் செல்கிறது. வெய்யோன் இயல்பாகவே பரசுராமனின் கதையிலிருந்து தொடங்கி கர்ணனைக் கண்டடைகிறது. அன்னையென்றும் காதலி என்றும் துணைவி என்றும் பெண்மையால் அலைக்கழிக்கப்படும் கர்ணனின் சித்திரமாக அது விரிகிறது. பெருந்தன்மையால் தோற்றுக்கொண்டே செல்பவன், வென்று நின்றிருக்கும் பேரறத்தின் தருணம் ஒன்றில் நிறைவடைகிறது.
பிறநாவல்களுக்கு மாறாக நுண்மையான அன்றாடத்தருணங்கள் நிறைந்த படைப்பு இது. உத்வேகமான புராணக்கதைகளும் எளிய சாகசச்சித்தரிப்புகளும் குறுக்குவாட்டில் புகுந்து இதன் பின்னலை அமைக்கின்றன.
இந்நூலை முன்பதிவு செய்ய கடைசி நாள்: ஆகஸ்டு,2 2016.
முன்பதிவு செய்பவர்கள் கவனத்துக்கு:
* இந்தியா முழுக்க தபால் செலவு இலவசம். எனவே ஆர்டர் செய்யும்போது தபால் செலவு இல்லாத வழியையே தேர்ந்தெடுத்து ஆர்டர் செய்யவும்.
* முன்பதிவு செய்தவர்களுக்கு ஒரு பதிவு எண் தரப்படும். அந்தப் பதிவு எண் கிடைக்கப்பெறாதவர்கள் கிழக்கு பதிப்பகத்தைத் தொடர்புகொண்டு அதைப் பெற்றிடவேண்டும்.
* முன்பதிவுத் திட்டத்தில் கேஷ் ஆன் டெலிவரி, விபிபி கிடையாது. பணம் செலுத்தி பதிவு எண் பெற்றுக்கொண்டவர்களுக்கு மட்டுமே புத்தகம் அனுப்பப்படும்.
* ஆகஸ்டு 16ம் தேதிக்கு மேல் புத்தகம் அனுப்பி வைக்கப்படும். முதலில் பதிவு செய்தவர்களுக்கு முதலில் புத்தகம் அனுப்பப்படும்.
* ஆன்லைனில் பதிவு செய்யமுடியாதவர்கள் டயல் ஃபார் புக்ஸ் 94459 01234 ஐ அழைக்கலாம்.
* எம் ஓ, டிடி, செக் மூலம் பணம் அனுப்ப விரும்புகிறவர்கள் New Horizon Media Private Limited என்ற பெயருக்கு செக் அல்லது டிடி எடுத்து, New Horizon Media Private Limited, 177/103, Ambals building, Royapettah, Chennai – 600 014, Tamilnadu என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். மறக்காமல் உங்கள் முகவரி, தொலைபேசி எண்ணோடு அனுப்பி வைக்கவும்.
* Money transfer செய்ய விரும்புபவர்கள் 94459 01234 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு, தேவையான விவரங்களைப் பெற்றுக்கொள்ளவும். அல்லது [email protected] என்ற மின்னஞ்சலுக்கு மடல் அனுப்பவும்.
* வெளிநாட்டிலிருந்து ஆர்டர் செய்பவர்கள் அதற்கான ஷிப்பிங் சார்ஜையும் சேர்த்தே பணம் செலுத்தவேண்டும். ஷிப்பிங் சார்ஜ் தொகையை ஆன்லைனில் ஆர்டர் செய்யும்போது அறிந்துகொள்ளலாம்.
* மேலதிக விவரங்கள் தேவைப்பட்டால் [email protected] என்ற முகவரிக்கு மடல் அனுப்பவும்.
* FAQ – https://www.nhm.in/shop/FAQ.html
* ஆன்லைனில் ஆர்டர் செய்பவர்கள் வெய்யோன் புத்தகத்தில் எழுத்தாளரின் கையெப்பம் வேண்டுமெனில் குறிப்பு பிரிவில் தெரிவிக்கவும்.