நீ சரியாய்
நீச்சல் கற்றுக் கொடுக்காமல்
இருந்திருந்தால்
உன் சுழிப்பில் அமிழ்ந்தோ
இழுப்புக்கு ஒப்புக் கொடுத்தோ
உன்னுடனேயே
கழித்திருப்பேன்
என் முக்காலங்களையும்
*
ஜெ,
நான் சமீபத்தில் வாசித்த முக்கியமான கவிதை இது. பலவகையிலும் அர்த்தம் அளித்து தேனிபோல ரீங்கரித்துக்கொண்டு மனதைச் சுற்றிவந்துகொண்டே இருக்கிறது
சரி எழுதிய கவிஞர் யார் என்று சொல்லுங்கள் பார்ப்போம்
பரிதி செல்வராஜ்
அன்புள்ள செல்வராஜ்
நல்ல கவிதை. சுருக்கமானது. வர்ணனை என ஏதும் இல்லாமலேயே ஒரு சித்திரத்தை அளிக்கிறது. அதற்கு ஒரு சொல்லும் மிகாதபடி எழுதப்பட்டுள்ளது. ஆனால் படிமமாகவும் நீடிக்கிறது.
பெரும்பாலும் நெல்லைக்கவிதை. கலாப்ரியா அல்லது கல்யாண்ஜி. என் எண்ணம் கலாப்ரியா என்று. சசி நீச்சல் சொல்லிக்கொடுத்து மூழ்கடித்த குழந்தையின் வரி
சரிதானே?
ஜெ
அன்புள்ள ஜெ,
சரிதான்
கலாப்ரியா
என் பிரியத்துக்குரிய கவிஞர்
இன்னொரு கவிதை
*
திறந்து கிடக்கும்
சன்னலில் அமர்ந்து
பறந்தெழும் பறவை
திகைக்கிறது
ஏன் சிறகிருந்தும்
நீ என்னுடன்
பறக்காமலிருக்கிறாய்
*
பரிதி செல்வராஜ்
அன்புள்ள செல்வராஜ்,
மீண்டும் ஒரு நல்ல கவிதை
டிகே நல்ல ஃபார்மில் இருக்கிறார் எனத் தெரிகிறது.
அவருடைய நீ சசி என்பது ஒரு கவியுலக ப்புரிதல்
இப்போது அந்த நீ இன்னொன்றாக ஆகிவிட்டிருக்கிறது. காதல்கவிதைகள் பக்திக்கவிதைகள் போலத்தெரிகின்றன
ஜெ