கங்காஸ்நானம்- ஜானகிராமன்

photo
அன்புள்ள ஜெயமோகன்,
தி.ஜாவின் கதைகளை திரும்ப வாசிக்கையில், முந்தைய வாசிப்பின் வியப்பும், கதையின் மீதான விமர்சனமும், அடுத்தடுத்த வாசிப்புகளில் மேலும் மேலும் மேம்படுகின்றனவே அல்லாமல் ஒருபோதும் குறைவு படுவதில்லை. ஆக, அவருடைய கதைகள் என்றென்றும் எப்போதைக்கும் பூரணத்துவத்துடன் மிளிர்பவை. சிற்பியின் இலாவகத்துடன் கதையைச் செதுக்கும் அவரின் எழுத்தாற்றால் எப்போதும் வியந்து போற்றுதற்குரியது; நாளும் நினைந்து ரசிப்பதற்குரியது.
சமீபத்தில் நான்  தி.ஜாவின் கங்கா ஸ்நானம் கதையைத் திரும்ப வாசித்த போது, தங்களின் நதி கதை நினைவில் வர, இரண்டையும் ஒருசேர வாசித்த போது, இரண்டு கதைகளுக்கும் உள்ள ஒற்றுமை என்னுள் மனவெழுச்சியைத் ஏற்படுத்தியது. எனவே, அதைக்குறித்து இணையத்தில் எழுதியிருக்கிறேன் (http://kesavamanitp.blogspot.in/2016/07/blog-post.html).
அன்புடன்,
கேசவமணி.
முந்தைய கட்டுரைஇந்திய இலக்கியம் – கடிதம்
அடுத்த கட்டுரைநெல்லை நினைவலைகள் -செல்வேந்திரன்