பச்சைத்தண்ணீர்ப்பக்கோடா – கடிதங்கள்

 

va.manikandan

 

அன்புள்ள ஜெமோ

பச்சைத்தண்ணீரை பக்கோடாவாக உண்பவர்களின் பட்டியலில் எங்கள் வா.மணிகண்டனை விட்டுவிட்டதை கண்டிக்கிறேன். அவர் பச்சைத்தண்ணீரை நல்லி எலும்பாகக் கடிப்பதற்கான பல்வல்லமை கொண்டவர் என இங்கே பதிவுசெய்ய விரும்புகிறேன்.

சக்தி குமாரசாமி

***

ஜெ,

யுவகிருஷ்ணாவின் கட்டுரை அருமை. நான் இப்படிப்பட்ட எழுத்துக்கள் ஃபேஸ்புக் வகையைச்சேர்ந்தவை என நினைத்துக்கொண்டிருந்தேன். ஃபேஸ்புக் என்பதே இப்படி சாப்பிட்டேன், தூங்கினேன், எந்திரிச்சு மறுக்கா சாப்பிட்டேன் வகையான எழுத்துக்களால் நிறைந்து கிடக்கிறது. ஆனால் தமிழுக்கு நீண்ட நெடிய பாரம்பரியம் உண்டு என்பதை அறிந்ததில் சந்தோஷம்

முத்துசாமி

***

அன்புள்ள ஜே

பப என்று ஓர் அடைமொழியே கொடுத்துவிடலாம் போலிருக்கிறதே. தினமணியில் எழுதப்படும் அரசியல் கட்டுரைகளையும் இந்த அழகியலில் சேர்க்கலாம். அதன் உச்சம் பாவண்ணன்

ஜெயராமன்

முந்தைய கட்டுரைவாயுள்ள ஊமைகள் -கடிதம்
அடுத்த கட்டுரைஎழுத்தும் உடலும்