இயல், தமிழ் இலக்கியத்தோட்ட விருதுகள்

டொரெண்டோவில் 2016, ஜூன் 18ம் தேதி அன்று தமிழ் இலக்கியத் தோட்டத்தின் பதினாறாவது இயல் விருது விழா ராடிஸன் ஹொட்டலில்
நடைபெற்றது. இம்முறை வாழ்நாள் சாதனைக்கான இயல் விருது திரு இ.மயூரநாதன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. உலகளாவிய பன்மொழிக் கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவை ஆற்றல் வாய்ந்த குழுமமாக உருவாக்கியதே திரு மயூரநாதனின் சாதனையாகும்.

இயல் விருதைத் தொடர்ந்து மற்றைய விருதுகளும் அறிவிக்கப்பட்டன.
சுந்தர ராமசாமி நினைவாக நிறுவப்பட்ட காலச்சுவடு அறக்கட்டளை ’கணிமை விருது’ திரு சே.இராஜாராமன் எனும் இயற்பெயர் கொண்ட நீச்சல்காரனுக்கு வழங்கப்பட்டது. புனைவு இலக்கியப் பிரிவில் “கண்டிவீரன்’ சிறுகதை தொகுப்புக்காக ஷோபசக்திக்கும்,  அபுனைவு இலக்கியப் பிரிவில் ‘குறுக்குவெட்டுகள்” நூலுக்காக திரு அசோகமித்திரனுக்கும், கவிதைப் பிரிவில் ’மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ என்ற தொகுப்புக்காக திரு குமரகுருபரனுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. மொழிபெயர்ப்பு பிரிவில் “மிர்தாதின் புத்தகம்” நூலை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த திரு புவியரசுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு, தேவிபாரதியின் சிறுகதைகளை ’Farewell, Mahatma’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்த என். கல்யாணராமனுக்கும், மாணவர் கட்டுரைப் போட்டியில் சிறந்த கட்டுரை வரைந்த ரேணுகா மூர்த்திக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. தமிழ் இலக்கிய சிறப்பு விருதுகளை இவ்வருடம் பிரெண்டா பெக்கும், சோ.பத்மநாதனும் பெற்றுக்கொண்டனர். இந்த விழாவுக்கு பல நாடுகளில் இருந்து எழுத்தாளர்களும், கல்வியாளர்களும் ஆர்வலர்களும் வருகை தந்து சிறப்பித்தார்கள்.

முந்தைய கட்டுரைவாயுள்ள ஊமைகள்
அடுத்த கட்டுரைதற்கொலை – ஒரு பெண்ணியக்கடிதம்