பண்டைய கழிவறை முறை

35-Ancient-toilets-at-Galab

 

அன்புள்ள ஜெயமோகன் அண்ணா அவர்களுக்கு வணக்கம்,

நிர்மாணப் பணிகளில் ஒன்றாக இல்லந்தோறும் தூய்மை கழிவறையின் அவசியம்  குறித்தான பிரச்சாரப் பணியை கிராமப்புறங்களில் மேற்கொள்ள உதவியாக கழிவறை குறித்தான விழிப்புணர்வு பிரச்சார ஆவணப்படம் ஒன்றை தயாரிக்கும் முயற்சியில் நமது காந்தி சர்வ சமய பிரார்த்தனை மையம் வாயிலாக ஈடுபட்டுள்ளோம்.

இந்த ஆவணப்படம் காண்போருக்கு சுற்றுபுறத் தூய்மை, ஆரோக்கியம் குறித்தான சரியான புரிதலுடன் கழிவறை கட்டுவதற்குண்டான தூண்டுதலை தருவதும் அவரவர் சக்திக்குட்பட்ட வகையில் தரமான கழிவறைகளை கட்ட உதவுவதும் ஆகும். எனவே சரியான வழிகாட்டுதல்களுடன் நிறைவான முறையில் இந்த ஆவணப்படத்தை உருவாக்குவதற்காக குத்தம்பாக்கம் இளங்கோ அண்ணன் (முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர்), ஈரோடு மருத்துவர் ஜீவானந்தம் அய்யா, திலகவதி அம்மா (முன்னாள் டிஜிபி) ஆகியோருடைய ஆலோசனையும் வழிகாட்டுதலும் பெற்று வருகின்றோம்.

தற்போது இந்த ஆவணப்படத்திற்கு வலு சேர்க்கும் ஒரு பகுதியாக பண்டைய காலங்களில் நமது கிராமங்கள் மற்றும் நகரங்களில் எந்தவகையான தூய்மை கழிப்பறை முறை பின்பற்றப்பட்டு வந்தது என்ற வரலாற்றுப் புரிதலை பெற முயற்சித்துக் கொண்டிருக்கின்றோம்.

இது தொடர்பாக தங்களின் உதவியை நாடுகின்றோம். இது குறித்தான தங்களின் பார்வை அல்லது பதிவுகள் இருப்பின் தயவு செய்து அதை தெரிவித்து உதவ வேண்டுகின்றோம்.

இது குறித்து தெளிவாக அறிந்துக்கொள்ள வரலாற்று ஆசிரியர்களை சந்திப்பது அல்லது அவர்களது புத்தகங்களை படிப்பது உதவிகரமாக இருக்கும் எனில் தயவு செய்து அத்தகவலை தெரிவிக்க வேண்டுகின்றோம்.

மேற்கூறியவற்றிற்கு தங்களின் வழிகாட்டுதலை மிகத் தாழ்மையுடன் பணிவன்புடன் வேண்டுகின்றோம்.

காந்தி சேவையில் பணிவன்புடன் சகோதரர்கள்,

செல்லதுரை 9790842245

முருகேசன் 9790906735

காந்தி சர்வ சமய பிரார்த்தனை மையம்

 

***

அன்புள்ள செல்லத்துரை, முருகேசன்,

இதுகுறித்து முறையான ஆய்வுகள் ஏதும் செய்யப்பட்டிருப்பதாக நான் அறிந்ததில்லை. ஒருவேளை நானறியாமல் ஏதாவது நிகழ்ந்திருக்கலாம்.

பொதுவாக பெருமிதங்கள் இல்லாமல் கறாரான தகவல்சார் ஆய்வுகள் இங்கே செய்யப்படுவது மிகவும் குறைவு

நீங்கள் அ.கா.பெருமாள் அவர்களை தொடர்பு கொள்ளலாம்

ஜெ

முந்தைய கட்டுரைகவிஞனின் சிறை
அடுத்த கட்டுரைபாரதமாதா : சொல்லும் மறுசொல்லும்