கடவுள், மதம் -கடிதங்கள்

index

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

ஆன்மீகம்,கடவுள், மதம் பற்றிய இந்த பதிவு பற்றி என் மனதில் தோன்றியவை:

அன்றாட வாழ்க்கையில் அறம் நீடிப்பதற்கு கடவுள் தேவையாகிறார் ஆனால் இன்று அந்த அறத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல ஆட்கள் தான் குறைவாக இருக்கின்றனர் இதற்கு இந்த தலைமுறை மக்களாகிய நாம் என்ன செய்ய போகிறோம் தெரியவில்லை.

கடவுள் என்ற மையத்தைச் சுற்றி எழுப்பப்பட்டுள்ள மதம் என்பது கடவுளில் இருந்து பெரிதும் வேறுபட்டது. மதம் என்பது பெரும்பாலும் ஒரு சமூக அமைப்புதான். பிறப்பது முதல் இறப்பது வரையிலான சடங்குகளின் தொகை அது. ஒரு மக்கள்கூட்டத்தை இணைத்துக்கட்டும் நம்பிக்கை.”

அணைவரும் அறிந்து கொள்ளும் வகையில் உள்ள இயல்பான கருத்தாக அமைந்துள்ளது மிக அருமை..

 “ஆன்மீகம் என்பது நாம் நமக்குரிய விடையை நாமே கண்டடைந்து அதை நம்முள் நிறைத்துக்கொள்வதாகும். அது பல படிகளிலாக நம்முடைய அகத்தில் நாம் சிறுவயது முதலே பெற்று நிறைத்திருக்கும் ஏராளமான நம்பிக்கைகள் அழிந்து , மனப்பழக்கங்கள் மாற்றம் கொண்டு, நாமே மெல்லமெல்ல மாற்றம் அடைந்து நாம் சென்று சேரும் ஓர் இடம். அந்தப் பயணத்தின் எல்லாப் படிகளும் அந்த வகையில் நம்மை மேலே கொண்டுசெல்லக்கூடியவையே.”

இதுவே என்னை பொறுத்த வரை உண்மையான கருத்தாகும். ஆனால் எனக்கு ” நம்மை மேலே கொண்டுசெல்லக்கூடியவையே”  என்பதில் மிகவும் குழப்பம் இருந்து கொண்டே இருக்கிறது , இதில் ”மேலே” என்றல் எது, எங்கே, எப்படி அதை அடைவது, இதை பற்றிய புரிதல் வருவதே இல்லை. என்று வருமோ தெரிய வில்லை, வரும் வரை காத்திருப்பதை தவிர வேறு வழியும் இல்லை.

அருமையானன இந்த பதிவை அளித்தமைக்கு நன்றி.

அன்புடன்.

உமாசங்கர்

***

அன்புள்ள ஜெ

ஆன்மீகம் கடவுள் மதம் முக்கியமான பதிவு

மொட்டையாக ஆன்மீகத்தை நிராகரித்துப்பேசும் வழக்கம் நம்மிடையே உண்டு. அவர்கள் ஒரு கட்டத்தில் அந்தரங்கமாக கடவுள் வழிபாட்டுக்குச் சென்று சேர்வார்கள்.ஏனென்றால் வாழ்க்கை அத்தனை சிக்கலானது. போகப்போக பயம் வந்து சூழ்ந்துகொள்கிறது

அல்லது வாழ்க்கை பிரபஞ்சம் எதைப்பற்றியும் ஒட்டுமொத்தமாக ஒன்றும் யோசிக்காமலிருக்கலாம். யோசிப்பவர்களுக்குரிய கேள்விகள் வேறு. அவற்றை தர்க்கபுத்திக்கும் கற்பனைக்கும் நுண்ணுணர்வுக்கும் பொருத்தமான முறையிலே சொல்லியிருக்கும் கட்டுரை அது

நன்றி

ஜெபா

முந்தைய கட்டுரைசிறுகதை, விடுபட்ட பெயர்கள்
அடுத்த கட்டுரைகவிஞனின் சிறை