நாளை [ஜூன் 10] திருவனந்தபுரத்திலிருந்து கிளம்பி அபுதாபி வழியாக லண்டன் செல்கிறேன். அருண்மொழியும் உடன் வருகிறாள். லண்டனில் ஒருவாரம்.அங்கிருந்து காரில் நண்பர்களுடன் கிளம்பி இரண்டுவாரம் ஐரோப்பாவை சுற்றிவருவதாகத் திட்டம். பாரீஸ், ரோம், வெனிஸ் எல்லாம் செல்வதாக இருக்கிறோம். லண்டன் நண்பர்களின் ஏற்பாடு
17 ஆம் தேதி மாலை லண்டனிலிருந்து ஐரோப்பாவுக்குக் கிளம்புவோம். முதலில் பாரிஸ், ஜெனிவா, பிசா, ஃப்ளோரன்ஸ், ரோம், வாட்டிகன், வெனிஸ், முனிக், ஜெர்மனி.
இது சொந்தச்செலவிலான பயணம் என்பதனால் இலக்கியக்கூட்டங்கள், இலக்கியவாசகர் சந்திப்புகள் எவற்றிலும் பங்கெடுப்பதாக இல்லை. முழுக்கமுழுக்க ஊர் சுற்றல் மட்டுமே. முடிந்தால் அவ்வப்போது எழுதுகிறேன் .