பெங்களூரிலிருந்து நேற்று காலை 930க்கு விமானத்தில் சண்டிகர் வந்தோம். ராக்கெட் ராஜா என்று அழைக்கப்படும் நண்பர் இளையராஜா வரவேற்றார். அவர் ஏற்பாடுசெய்த காரில் சிம்லாவைக்கடந்தோம். ஒரு சிற்றூரில் தங்கியிருக்கிறோம். இம்முறை அன்றன்று பயணக்குறிப்பு எழுதமுடியாது. இனிமேல் இணைய வசதி கிடையாது. ஆகவே வந்தபின் பாக்கலாம்
ஜெ