மார்க்ஸ்-கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்

நேற்று கொஞ்சம் உட்கார்ந்து மார்க்ஸ் இந்தியா குறித்து கூறிய விஷயங்களை மீண்டும் பார்த்தேன். மிகவும் நுட்பமாக வேண்டுமானால் மார்க்ஸ் இந்திய பாரம்பரிய சொத்துரிமையில் பாஸீட்டிவான விஷயங்களைக் கண்டிருக்க கூடுமென வாதாடலாம். ஆனால் அது சுற்றி வளைத்து செய்யபப்ட வேண்டும். அந்த அளவு நம் மார்க்சியர்கள் மார்க்ஸை படித்திருப்பார்களா? பின்னாட்களில் மார்க்ஸ் ஏங்கல்ஸுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் இந்தியாவின் தொழில்களை இங்கிலாந்து அழித்துவிட்டதை “புரட்சிகரமானது” என தான் சொல்வதை மீண்டும் நினைவுவ்படுத்திவிட்டு “இங்கிலாந்தின் இந்திய நிர்வாகம் வெறுக்கத்தக்கது” (detestable) என்று குறை சொல்லுகிறார். இதில் இந்தியாவின் தொழில்களை இங்கிலாந்து அழித்ததை மார்க்ஸ் ஒரு விமர்சன கண்ணோட்டத்துடன் பார்த்தார் என பாஷ்யம் எழுதுபவர்கள் இருக்கிறார்கள் நன்றி.

பணிவன்புடன்
அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன்

மொத்த பின்தொடரும் நிழலின் குரலும் இந்த ஒரே அறப்பிரச்சினையையே பலகோணங்களில் பேசுகிறது இல்லையா?

கருத்தியல் வலுவாக ஆகும்தோறும் அது அறவுணர்ச்சிக்கு பதிலாக அங்கே வந்து அமரும் என அருணாச்சலம் கண்டுபிடிக்கிறார்

ஜெ

அன்புள்ள ஜே,

மார்க்சின் ‘உபரி மதிப்பு’ என்ற கருத்தாக்கமே மிக தவறு என்று
நிருபிக்கப்பட்டுவிட்டது. ‘தாஸ் கேபிடலின்’ ஆணிவேர் அது.

இதை பற்றி நான் முன்பு எழுதிய பதிவு :

‘உபரி மதிப்பு என்னும் மாயயை’
http://nellikkani.blogspot.com/2009/11/blog-post.html


அன்புடன்
K.R.அதியமான்

முந்தைய கட்டுரைதஞ்சை தரிசனம் – 4
அடுத்த கட்டுரைதஞ்சை தரிசனம் – 5