இன்றைய புத்தக வெளியீட்டு நடைமுறையை ஒட்டி மொத்தமாக நூலை வெளியிடும் எண்ணம் அன்றைய பதிப்பாசிரியருக்குத் தோன்றியிருக்காது. அன்றைய நிலையில் அது சாத்தியமும் இல்லை. 18 பருவத்தைக் கொண்ட மகாபாரதத்தை, மொழிபெயர்ப்பு முடியமுடிய பருவம்பருவமாக வெளியிட ஒருவேளை விரும்பியிருக்கலாம்; அதன் சாத்தியமின்மையையும் அவர் கருதியிருக்க வேண்டும். எனவே 200 பக்க அளவிலான சஞ்சிகைகளாக இருமாதத்திற்கு ஒருமுறை வெளியிட்டு 45 சஞ்சிகைகளில் முழு பாரதத்தையும் தமிழாக்கி வெளியிட்டுவிட அவர் திட்டமிட்டார்.
மகாபாரதத்தை தமிழாக்கம் செய்த ம வீ ராமானுஜாச்சாரியார் குறித்து ஒரு கட்டுரை.