திருலோக சீதாராம்- கடிதம்

kmrk 1974

அன்புள்ள திரு ஜெயமோகன் !வணக்கம்.
திருலோக சீதாராம் பற்றிய தகவல்  வாசித்தேன். பதிவு சரியாக பதிவாகவில்லை. ஏதோ கணினிக் கோளாறு.
அந்தப் பதிவில் வெளியாகியுள்ள ஜி டி நாயுடுவுடன் ஆன அரிய புகைப்படம் மிக நன்று.அந்தப் புகைப்படத்தில் கையில் பூ மாலையுடன் இருப்பவர் சேக்கிழார் அடிப்பொடி தஞ்சாவூர் திரு. டி.என். ராமச்சந்திரன். இப்போது 83 வயது. உயர்திரு டி என் ஆர் திருலோகத்திற்குப் பிறகு சிவாஜி பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர்.சிவாஜியின் எல்லாப் பழைய பிரதிகளும் பெரும்பாலும்
திரு.டி என் ஆர் வசம் இருக்கலாம்.அவருடைய நூலகம் மிகப் பெரியதும் முக்கியமானதுமாகும்.
திரு.ரவி சுப்ரமணியன் திரு டி என் ஆர் பற்றியும் ஆவணப்படம் எடுத்துள்ளார்.
அதற்கான யூ ட்யூப் சுட்டி கீழே.திருலோகத்தினைப் பற்றிய ஆவணப்படத்திற்கான‌ அனைத்துச் செய்திகளும்  திரு டி என் ஆர் வசமிடமிருந்தே திரு.ரவி சுப்ரமணியன் பெற்றிருக்கும் வாய்ப்பு அதிகம்.
திரு டி என் ஆரின் சைவ சித்தாந்தம், மில்டன், பாரதி உரைகளை கேட்கும் பேறு பெற்றவன் என்று பெருமை அடைகிறேன். பாரதியின் குயில் பாட்டு,
பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு ஆகிய‌வற்றை திரு டி என் ஆர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
அன்புடன்,
கே.முத்துராமகிருஷ்ணன்(ஆங்கரை,லால்குடி)

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 45
அடுத்த கட்டுரைபிராமணர்- பழியும் பொறுப்பும்