இலட்சியவாதம், கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்
நீங்கள்  “ஒரு சொல்லாட்சி ‘வெர்சேல்ஸ் உடன்படிக்கை முதல் ஹிரோஷிமா வரை’ என்பது. என் வரலாற்றுப்பிரக்ஞையில் ஒரு புரளலை உருவாக்கியது அது. 1789 ல் பிரெஞ்சுப்புரட்சியின் வெர்சேல்ஸ் உடன்படிக்கை ‘சமத்துவம் சகோதரத்துவம் ‘ என்னும் ஆதார ..”  என எழுதுகிறீர்கள்.
இங்கு வெர்சேல்ஸ் உடன்படிக்கை  என்பது 1789 பிரெஞ்சுப் புரட்சியை குறிப்பிடுவது அல்ல. 1914-18  முதல் உலக யுத்தம் முடிந்தவுடன் பல நாடுகள் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டுவந்த உடன்படிக்கை . அது பாரிசின் வெர்சாய் அரண்மனையின் நடந்ததால் அதை வெர்சாய்  (வெர்சேல்ஸ்)  உடன்படிக்கை  என கூப்பிடுகின்றனர்.
ஹாப்ஸ்வாமின் கட்டுரையை இங்கு படிக்கலாம்.
அவர் சொல்கிறார்: 19ம் நூற்றாண்டு (ஐரோப்பிய) நாகரீகம் முதல் உலக யுத்தத்தில் அழிந்தது. ஆனால் அது நாகரீகத்தை மறுவாழ்வு செய்யாமல் இன்னும் பேரழிவிற்க்கு காரணமாக இருந்தது.
(civilization receded between the Treaty of Versailles and the fall of the bomb on Hiroshima. …….We may need to explain why nineteenth-century civilization did not recover from World War I, as many expected it to do. But we know it didn’t. It entered upon an age of catastrophe: …………..   when we consider that the period ended in the greatest school of barbarism of all, the Second World War.)
மதிப்புடன்
வன்பாக்கம் விஜயராகவன்
அன்புள்ள விஜயராகவன்
உண்மை, பிழைதான்
ஒற்றைவரி எழுப்பிய ஒரு தூண்டுதல், நெடுந்தூரம் சென்றுவிட்டேன்
ஜெ
திரு. ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம்
தங்களின் இன்றைய காந்தி கடந்த இரண்டு வாரமாக படித்து வருகிறேன் . சுமார் எழுபத்து ஐந்து பக்கம் வந்திருப்பேன். இதுவரை பக்கங்களை தாண்டுவதற்கு நான் இப்படி கடினப்பட்டதில்லை.முக்கிய நினைவிற்காக அடிக்கோடிட்டு , அடிக்கோடிட்டு ,பக்கம் வரிக்குதிரையாகியுள்ளது.கோடிடாத வார்த்தைகளே இப்போது பளிச்சென தெரிகிறது . விதி
ஓலைசிலுவையின் சாமுவெல் போல என் நிலத்தையும் , உத்தரவையும் எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டேனா? . எனது நீண்ட சிந்தனைகளில் சமீபத்தில் படித்த தங்களின்  பல்வேறு புத்தகங்கள் ஒரு மெல்லிய கோடுகளில் இனைவதை காண்கிறேன் . “காந்தியில் ” சமண மதம் பற்றியும் அது சென்று பரந்து பரவிய விதம் குறித்தும் ஆன்மீக , வர்த்தக நிலைகளில் ஏற்பட்ட ஒழுங்கு ….. பல அடுக்குகளை கண்டு குதூகளித்திருந்த சமயம் , போதாக் குறைக்கு தங்களின் “மனப்பிழைகள் பத்து” பதிவை படித்துவிட்டது  ஒரு உள்ள உலுக்கள் போல இருந்தாலும் , சரியான திசையில் சென்று கொண்டிருகிறேன் என அவதானிக்க முடிகிறது .

||   இந்த பத்தையும் ஒரேவரியாகச் சுருக்கலாம். உள்ளுணர்வை தவிர்த்துவிட்டு தர்க்கபுத்தியை தீட்டிக்கொள்ளுதல். ஒரு நல்ல வியாபாரிக்கும், நிர்வாகிக்கும் இது அவசியத்தேவை. ஆனால் இந்த பத்தையும் ஒரு கலைஞன், ஒரு சிந்தனையாளன் வெட்டிவிட்டான் என்றால் அவனை வழிநடத்த ஆழ்மனமே இல்லாமலாகும். ’மின்னல்கள்’ வராமலாகும். அவன் பொதுப்புத்தி சார்ந்து மட்டுமே பேசவேண்டியிருக்கும்

ஆக, இந்தபத்துக்கும் எதிராக இருந்து மோசமான வணிகராக மோசமான நிர்வாகியாக நீடிப்பதே எழுத்தாளனுக்கு அழகு. ஆகா, என்ன ஒரு நிம்மதி. அப்படியே தூங்கிவிட்டேன்||

எழுத்தாளனுக்கு மட்டுமல்ல அவரை தொடர்பவனுக்கும் இது பொருந்தும் . நல்லவேளை பதிவை விளையாட்டாக தாண்டிவிட்டேன் . இல்லாவிட்டால் என்னாவது? காந்தியை படிக்க இயலாது குழம்பி இருப்பேன் . ஆகா, என்ன ஒரு நிம்மதி. நானும் அப்படியே தூங்கிவிட்டேன்
மற்றொரு கடிதத்தில் என் மனப்பதிவுகளை எழுதி வருகிறேன் “இன்றைய காந்தி ” முடித்த பிறகு தங்களுக்கு அனுப்ப எண்ணியுள்ளேன் .
தங்களின் “இலட்சியவாதம் அழிகிறதா” பதிவு ” இன்றைய காந்தி” யை மறுபடியும் முற்றிலும் புதிய கோனத்தில் பார்க்க தூண்டுகிறது . இனி காந்தி முடிய பல காலம் ஆகும் போல !!இருக்கிறது . தங்களின் எழுது வேகத்திற்கு ஈடு கொடுக்க இயலாமல் நிறுத்தி வைத்த   தங்களின் பன்னிரு படைகளம் 31 பதிவுகளை தாண்டிவிட்டது . என்ன கதியாகப்போகிறேன் எனத்தெரியவில்லை.
தங்களின் “இலட்சியவாதம் அழிகிறதா” பதிவு ||பிரெஞ்சுப்புரட்சி மானுட மேன்மைக்கான ஒரு சாசனம் என்றால் மானுடக்கீழ்மைக்கான ஒரு ஆவணமா ஹிரோஷிமா?|| காந்தியை தாண்ட விடாது என நினைக்கிறேன் .
ஒரு சிறிய சந்தேகம் Better dead than red ஆ Better red than dead ஆ தங்கள் பதிவில் Better dead than red என்று குறிப்பட்டிருந்தீர்கள் . விஷயத்தில் ஆர்வம் ஏற்பட்டு நெட்டில் துழாவியதில் Better red than dead  என இருந்தது . எது சரி
மிக்க அன்புடன்
அன்புள்ள அரிகிருஷ்ண
இரண்டும் சரிதான்
ஒன்றின் இரு பக்கங்கள்
ஜெ
முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 42
அடுத்த கட்டுரைமுடிவின்மையின் விளிம்பில்