தினமலர் கடிதங்கள்

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,

வணக்கம்.

தினமலர் நாளிதழில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலையொட்டி நீங்கள் எழுதிய அரசியல் கட்டுரைகள் எல்லாம் தொகுக்கப்பட்டு புத்தக வடிவில் வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி. இந்த கட்டுரைகள் மூலம் வாசகர்கள் மத்தியில் உண்மையான அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி,அவர்களின் அறியாமைகளை அகற்றி நமது நாட்டு ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை கொள்ள தூண்டி உள்ளீர்கள். இதுவும் ஒரு எழுத்தாளர் ஆற்றவேண்டிய ஒரு சமூக சேவைதான். இந்தச் சூழ்நிலையில் மிகவும் முக்கியமானதும் கூட அதற்காக உங்களுக்கும், தினமலர் நாளிதழுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி.

அன்புடன்,

அ .சேஷகிரி.

***

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

தங்களின் கட்டுரைகளை ஆர்வத்தோடு படித்துவரும் தினமலர் வாசகர்களில் நானும் ஒருவன். நேற்றைய இதழில் (38) தங்களின் பெரும்பான்மையினர் கருத்து சிறுபான்மையினர் கருத்து குறித்து எழுதி இருந்தீர்கள் உங்கள் கருத்துடன் நான் ஒத்துப்போகிறேன்

தமிழகத்தின் இன்றைய நிலை 7.5 கோடி மக்கள் தொகை.கடந்த 46 ஆண்டுகளில் (1970-2016) இரட்டித்து விட்டது. ஆனால் நிலப்பரப்பு அதே அளவு. எனவே அனைத்து வளங்கள், உள்கட்டமைப்பு போன்றவை அதற்க்கு ஈடு கொடுக்க முடியாத நிலை. இந்த அதிகரித்த மக்கள்  தொகையால் மலைகள், காடுகள், வயல்கள், நதிகள் ஏரிகள், கண்மாய்கள் போன்ற அனைத்து வளங்களும் நசுக்கப்பட்டு விட்டன அல்லது அழிக்கப்பட்டு விட்டன ஒரு விதத்தில் இருப்பிடமான வீடுகள் மேல் நோக்கி சென்று பல்வேறு அடுக்குமாடி கட்டிடங்கள் ஆகி விட்டன

ஆனால் மற்ற வளங்கள் கதி ?

தங்களின் இது குறித்த விமரிசனத்தை வரும் கட்டுரைகளில் எதிர் நோக்குகிறேன்

ஹரிநாதன் .கி

 

 

முந்தைய கட்டுரைஜனநாயகச்சோதனைச்சாலையில் – முன்னுரை
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 37