சத்தியத்தின் குமாரன் – ஜே.சி.குமரப்பா (நிலைத்த பொருளாதாரம் – நூல் வெளியீட்டு விழா)

மதிப்பிற்குரிய  ஜெயமோகன் அவர்களுக்கு,

இறைவன் ஒரு போதும் எனது பிரார்த்தனைகளுக்குசெவி சாய்க்க தவறியதில்லை

                                                                         – மகாத்துமா காந்தி
images

நம்பிக்கை என்பது பரிபூரணமோ,கீற்றளவோ அதனை எவ்வளவு கைக் கொள்கிறோம் என்பதே நமது வாழ்வின் வெளிப்பாடு.சாமான்ய மனிதரான காந்தி அவரின் உள்ளம்,ஆன்மா மற்றும் செயல்பாட்டின் வழியே ஒளியினை பெற்றுக் கொண்டவர்கள்,தீவிரமாக சத்தியத்தை தொடர்ந்தனர்.அப்படி தன் வாழ்க்கையை சுட்டெரிக்கும் நெருப்பினை போலவே அமைத்துக் கொண்டவர் ஜே.சி.குமரப்பா .

ஜே.சி.குமரப்பா  அவர்கள் உருவாக்கிய காந்திய பொருளாதார சிந்தனைகள்,செயல் திட்டங்கள் அவரின் கால கட்டத்தில் புறக்கணிக்கப்பட்டன.அவற்றை தற்பொழுது மீட்டு எடுக்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்.குமரப்பா எனும் தீர்க்கதரிசி என்றோ நாம் அனுபவிக்க இருக்கும் பிரச்சனைகளை மேலும் விளைவுகளை ஆராய்ந்து அவற்றுக்கான தீர்வுகளையும் முன்வைக்கிறார் .

வணிகமயமான வாழ்க்கை முறை நமக்கு ஒரு போதும் சுதந்திரத்தையும்,நிம்மதியையும் அளிக்காது.நெருப்புடன் விளையாடும்  குழந்தை போலவே நாமும்  சூடு பட்ட பிறகு தான் இந்த உண்மையை தெரிந்து கொள்கிறோம்.பட்ட புண்ணுக்கு மருந்தாகவும் அந்த நெருப்புடன் நெருங்கி பழகி வாழவும் உகந்த வாழ்வியல் சிந்தனைகளை உள்ளடக்கியது தான் ஜே.சி.குமரப்பா அவர்களின் “நிலைத்த  பொருளாதாரம் ” புத்தகம் .

இந்த புத்தகத்தின் வெளியீட்டு  தருணத்தில் “இன்றைய காந்தி” புத்தகம் அளித்த மனவிரிவினை நாங்கள் நன்றியோடு நினைவு கூறுகிறோம்.இயல்வாகை பதிப்பகத்தின் அழகேஸ்வரி மற்றும் பனை அமைப்பின் பூபாளன் இவர்களின்  முயற்சியின்  வழியே இந்த புத்தகம் உயிர் பெற்றுள்ளது .

நாள்  :   30.4.2016 ,காலை 9 மணி
இடம் :   குக்கூ காட்டுப்பள்ளி ,
ஜவ்வாது மலை அடிவாரம்,சிங்காரப் பேட்டை

நிகழ்வின் அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது .

தொடர்புக்கு – ,

inv side_01 copyinv side_02 copy

 

முந்தைய கட்டுரைசென்னையில் ஒரு புதிய துவக்கம் – சுனில்
அடுத்த கட்டுரைசென்னையில் நண்பர்களுடன்…