தாய்மொழி என்னும் ஏமாற்றுவேலை

profile

பதினைந்தாண்டுகளுக்கு முன்பு ஒருமுறை மேற்குமலைகளில்  ஒரு சூழியல்குழுவுடன் நடந்துகொண்டிருந்தேன். வழிகாட்டி அழைத்துச்சென்ற பளியர் தன்னுடன் வந்த இன்னொரு பளியரிடம் சரளமாகப்பேசிக்கொண்டிருந்தார். அது தமிழ் மலையாளம் இரண்டுபோலவும் இருந்தது, இரண்டும் இல்லை. வழிகாட்டிப்பளியர்பேசியது தமிழா என்று என்னுடன்வந்த நண்பருக்குச் சந்தேகம். அவர் கேரளதேசியம் அல்லது மலையாளதேசியம் பேசும் சிரியன் கிறிஸ்தவர்.

நண்பர் “நீங்கள் பேசுவது மலையாளமா தமிழா?” என்றார். “இல்லை ஐயா, பளியபாஷை” என்றார். நண்பர் சிறிய அதிர்ச்சியுடன் என்னைப்பார்த்துவிட்டு “பளியமொழி தமிழா இல்லை மலையாளமா?” என்றார். அவர் “இல்லை ஐயா பளியபாஷை” என்றார். கொஞ்சநேரம் அதைப்பற்றியே பேச்சு நடந்தது. “மலையாளத்தைப் பாதுகாப்போம் ” என்னும் கோஷம் கொண்ட இயக்கத்தின் நண்பர்கள் பலர் இருந்தனர். லிபிச்சீர்த்திருத்தங்களுக்கு எதிரானவர்கள். இன்றும் செயல்பட்டுவருகிறார்கள்

“பளிய மொழியை எவர் பாதுகாப்பார்கள்? அது அழிவது பண்பாட்டு அழிவு அல்லவா? அதை அழித்துத்தானே மலையாளம் வாழ முடியும்? பளியமொழி பள்ளிக்கூடங்களில் சொல்லிக்கொடுக்கப்படுவதில்லை. அது அழியத்தானே வேண்டும்?” என்றெல்லாம் கேள்விகள் வந்தன. மொழிமையவாதிகள் எரிச்சலடைந்து ஒருகட்டத்தில் கத்த ஆரம்பித்துவிட்டனர்

 

சுவாரசியமான கேள்விகளைக் கேடும் டி தர்மராஜின் இந்த உரை முக்கியமான ஒன்று – தாய்மொழி என்னும் ஏமாற்றுவேலை

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 36
அடுத்த கட்டுரைதேவதேவன் விபத்துக்குப்பின் குணமடைந்தார்