கடிதங்கள்

தீபாவளி

ஜெ,

முத்துகிருஷ்ணன் தங்களுக்கு எழுதிய கடிதம் படித்தேன். தேவதேவனின் அக்கவிதை புரிந்ததுபோலும் உள்ளது புரியாதது போலும் உள்ளது. ஆனால் நான் இங்கே சொல்லவந்தது முத்துகிருஷ்ணனின் தீபாவளி அனுபவம் பற்றி.

தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகைகள் ஒரு பக்கம் குதூகலத்தை அளிப்பவையாக தோன்றினாலும் அவற்றின் மறுபக்கம் அழுத்தமான வலியை உண்டாக்குவது என்பது நான் கண்டும் அனுபவித்தும் கொண்ட கருத்து. பட்டாசு வாங்கவே முடியாத ஏழைகள் மட்டுமின்றி ஏ-பிளாக் நண்பர்கள் வெடிக்கும் பாணங்களை விடமுடியவில்லையே என முத்துகிருஷ்ணன் போல நடுத்தரவர்க சிறுவர்களையும் ஏங்க வைக்கின்றன. நானே பட்டாசு விரைவில் தீர்ந்துவிட்டதென சோகத்துடன் உடகார்ந்திருந்து என் தந்தையையும் துயருரச்செய்திருக்கிறேன். அச்சிறு வயதில் தன் வாங்கும் சக்திப்படி அப்பா வாங்கிக் கொடுத்திருக்கிறார் என்ற பக்குவம் இல்லை. பின்னாட்களில் நானே ஒரு சிறு பட்டாசுக் கடை (கட்டிலில்) வைத்திருக்கிறேன். அங்கு அருகில் ஒரு குடிசைப்பகுதியும் இருந்தது. அப்போது எனக்கேற்பட்ட அனுபவங்கள் அதிர்ச்சியாகவே இருந்தன. இதற்கும் அப்போது நான் பள்ளியில்தான் படித்துக் கொண்டிருந்தேன். எனது அதிர்ச்சி அனுபவங்களை ஒரு கதையாக 7 வருடங்கள் முன்பு எழுதினேன். அப்போது தமிழ் தட்டச்சு வசதிகள் அதிகம் இல்லையென்பதால் ஆங்கிலத்தில் எழுதினேன்.

http://thinkingalound.blogspot.com/2006/02/gorgeous-festivals.html

பகட்டான பண்டிகைகள் ஏழைமக்களுக்கு துயரையே அளிக்கின்றன என்ற கருத்திற்கு வந்தேன். ஆனால் சில நண்பர்கள் அதை மறுக்கின்றனர். உதாரணமாக எனது பதிவில்(http://vurathasindanai.blogspot.com/2006/02/blog-post_28.html) பின்னூட்டமிட்ட ஆளவந்தான் இவ்வாறு குறிப்பிடுகிறார் : “I read your post in English. you have narrated the incidents very well, but I couldn’t agree with you statement. I am also from lower middle class family and My mom used to say..
”பணக்காரவுங்களுக்கு என்னைக்குமே திருநாளு தான், ஏழைகளுக்கு தீபாவளி பொங்கல் தான் திருநாள்” .. If there is no festival like that, he wont even TRY to celebrate that.. this is only for POORS.. Rich can buy new cloths, prepare new sweets, fire crackers at any time as they wish. But poor will do only on that auspicious day. ”

இதுகுறித்த தங்கள் சிந்தனை என்ன? முத்துகிருஷ்ணனுக்கு என் கதை பிடித்துப்போகும் என நினைக்கிறேன்!

அன்புடன்,
சாணக்கியன்
http://vurathasindanai.blogspot.com
http://thinkingalound.blogspot.com/

On ஜெயமோகனும் தாக்குதல்களும்

Their quarrel will never end.It is their only job.I think jeyamohan handles this so easily but got wounded.It is unavoidable in a immatured world as we live in.And also he must think twice before throwing some harsh comments about anything around him.They are deeply wounded when he retaliates them at such a sharpness and a satire.He should play the role of a vast sky as admitting everything within him , not denying anything.

Selvan

On தினமலர்,நேர்காணல்

Cinema is a different media where you can not sale your real dreams initially, because it will take a long time to have that freedom.Andre it moves in another plane than the written literature.If you are strongly attracted by it, you can go for it.
Selvan

On கர்மயோகம்

there is a lot to discuss and to understand.It is not enough to observe mind only, there is a whole series of staircase ascending and descending from spirit to matter and vice versa.But the initial step is what you have said.We have to realise the supreme consciousness ,that is our goal anyhow.the question arises immediatley what is consciousness?.Yes it is all pervading energy , moving force, capable of creating all things in the universe.We have to study the nature of consciousness in its full detail.And the story goes without end.

Selvan

On புண்படுத்தாத நகைச்சுவை என்பது…

அன்புள்ள ஜெயமோகன்,
ஒரு கேள்வி. சிரிப்பு என்பது தற்செயலாய், மிகவும் திறந்த மனநிலையின் போதே சாத்தியப்படுகிறது. இதில் நல்லது கெட்டது என்று பிரித்துப் பார்த்து எப்படி சிரிப்பது? இந்த கேள்வியை ஒருவரிடம் கேட்டு அவர் என்னிடம் சண்டைக்கு வந்து விட்டார். ரொம்ப சென்டிமென்டலா அப்போ ஒரு ஏழையை அவன் வறுமையை நீ கிண்டல் செய்தால்..அது மிருகத்தனமானது அது இதுவென்று திட்டிவிட்டார். நகைச்சுவையில் தரம் பிரிப்பது புரிகிறது. ஆனால் நல்லது கெட்டது?
Bala

முந்தைய கட்டுரைஇணைய விவாதங்கள் பற்றி
அடுத்த கட்டுரைமார்க்ஸ் கண்ட இந்தியா