தினமலர், கடிதங்கள்

 

https://www.facebook.com/varalarutamil/videos/872424166213053/

ஜெ

உங்கள் நண்பரின் ஃபேஸ்புக்கில் இந்த இணைப்பைப்பார்த்தேன். நீங்கள் அரசியல்கட்டுரைகளை ஆழமாக எழுதிக்கொண்டிருப்பது இந்தக்கும்பலுக்காகத்தான்.

அரசியல் டிவிக்களுக்குக் கூட நாற்பதுக்குமேல் வயதுள்ள மாமாக்கள்தான் ஆடியன்ஸ்

அன்புடன்

மகேஷ்

 

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஜெயமோகன் ,

தங்களுடைய ‘துலாக்கோலின் முள்’ கட்டுரையை வாசித்தேன். சுருக்கமான ஆனால் செறிவான கட்டுரை .என் மனதில் உள்ள அரசியல் பற்றிய கருத்துக்களை தங்கள் கட்டுரையில் கண்டபொழுது என்  எண்ணங்கள்  சரிதான் என்று நினைத்துக்கொண்டேன் .என்னுடைய   தமிழக மற்றும் கேரள அரசியல் சார்புடைய நண்பர்களுடன் பேசும்பொழுது ஒட்டுமொத்தமாக பார்த்தால்  கட்சி சாராதவர்களின் வாக்கு  தான் அதிகம் அதனால் தான் ஆட்சி மாறுகிறது என்பேன் .அவர்கள் அதனை மறுக்கமுடியாததால்  சிரித்து  மழுப்பிவிடுவார்கள் .அவர்கள் தங்கள் கட்சி செய்கின்ற பெரும் தவறுகளை கூட நியாபடுத்துவதை   பார்த்திருக்கிறேன். உதராணமாக , கம்யூனிஸ்ட் நண்பர்கள் சீனாவை விதந்தோந்துகையில் , சீனா பின்பற்றுவது முதலாளித்துவ பொருளாதார கொள்கை என்றும் அங்கு அவர்களின் சொந்த சாதனை என்பது அடக்குமுறை அரசியல் மட்டுமே  என்று சொன்னால் அவர்கள் கோபப்படுவதை பார்த்திருக்கிறேன்.மேலும் நீங்கள் கியூபா , வடகொரியாவின் பொருளாதாரம்  பற்றியும்  வாரிசு அரசியல் பற்றியும் பேசலாமே என்றால் மெல்ல நகர்ந்துவிடுவார்கள் .

அரசியல் விழிப்புணர்வு என்பது அரசியலை நன்கு புரிந்து வைத்திருப்பது , அரசியல் வாதியின் பின்னால் அணிவகுப்பதல்ல என்பது என் எண்ணம்.நீ எதை கருத்தில்கொண்டு வாக்களிப்பாய்  என்று யாராவது என்னிடம் கேட்டால் , யார் நன்றாக நிர்வாகம் செய்து  அடிப்படை சுகாதாரம் ,கல்வி ,உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு மற்றும் தொழில்துறை வளர்சிக்கு சிறிதளவேனும் உதவுகிறார்களோ அவர்களுக்கு .தனிப்பட்ட முறையில் வேட்பாளரின் குற்றபின்னணி குறித்தும் கருத்தில்கொள்வேன் .எனது வாக்கு திட்டங்களை செயல்படுத்துபவருக்கு ,வசையாளருக்கல்ல என்று பதில் சொல்வேன் .ஆம், மக்கள் கட்சி அபிப்ராயங்களை கடந்து திட்டங்களை கருத்தில் கொண்டு வாக்களிக்கும்போது  மட்டுமே நல்லது நடக்கும் .தங்களுடைய கட்டுரை என்னுடைய நிலைப்பாடு தவறல்ல என்று உணர்த்தியது.

மகேஷ்

சுயேச்சைகளின் அரசியல் மீண்டும் ஒரு முக்கியமான கட்டுரை. வெற்றிபெறுபவருக்கு தான் என் ஓட்டு என்பது தமிழனின் தலையாய மூடநம்பிக்கை. எப்போது என் வாக்கு சக்தி வாய்ந்த ஒரு ஆயுதம் நான் அதை சரியான முறையில் பிரயோக்கிப்பேன் என்ற எண்ணம்வருகிறதோ அப்போது தான் நல்ல காலம் வரும்.

ஆனால் அந்த   சக்தியை  பயன்படுத்த  முடியாத அளவுக்கு  அந்த ஆயுத்தயே விலை பேசி விட்டார்கள். நீங்கள் கூறும்.அப்படி ஒரு நூறுபேர் நம் அரசியலுக்குள் நுழைந்தால் எப்படி இருக்கும்!   படித்து அதை நினைக்கும் போது அப்படி ஒரு பரவசமான உணர்வு.

நடராஜன்.

 

முந்தைய கட்டுரைதினமலர்-36, துலாக்கோலின் முள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 31