தினமலர் கடிதங்கள்

வணக்கம் திரு.ஜெயமோகன் அவர்களே ,.
நான் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் பொறியாளன் ..
 நானும் இந்த இயந்திர வாழ்க்கை முறையில் ஒரு அங்கம் ஆவேன் ..
 அரசியலை, எம்மைப் போன்ற படித்தவர்கள் கூட மிக நுட்பமாக ஆராய முயற்சிப்பதில்லை என்பதே வேதனைக்கு உரிய உண்மை.
உங்களுடைய இந்த  ஆழமான அறிவார்ந்த கட்டுரை எம்மை போன்ற இளைஞர்களின் மனதில் ஏற்றி வைத்த மெழுகுவர்த்தி ..
 எனது மனமார்ந்த நன்றி ..! மற்றும் வாழ்த்துக்கள் ..!
இப்படிக்கு ,
க.ரமேஷ்குமார்

புரட்சி வர வேண்டும். எத்தனை சுலபமான சொல். நடைமுறையில் எத்தகைய அரிதான நிதர்சனம்.

உண்மையில் புரட்சிக்காரன் என்பவன் சேகுவாரா t shirt அணிந்து இணையத்தில் சகட்டு மேனிக்கு திட்டுவபன் அல்ல. மக்களுக்காக அன்றாடம் முட்டி மோதி தன் காலத்தில் போராடி அடுத்த தலைமுறைக்காவது நல்லது நடக்கட்டும் என்று போராடுபவன். அந்த உண்மைப் போராளிகள்  இன்றைய காலத்தில் அரிது.

நீங்கள் குறிப்பிட்ட அதாவது வேர் உள்ளே இருக்கையில் மேலே தெரியும் முளையை வெட்டுவது போன்றது அது.

இந்த வரிகள் இந்த சமூகம் மொத்தமாக மாற வேண்டிய அவசியத்தை உணர்த்தியது.
கத்திப் பேசாமல்,  முஷ்டியை உயர்த்தாமல் , அடுக்கு மொழி பேசாமல்,  தன்னை தேவதூதனாக காட்டிக்கொள்ளாமல் ஒரு சிறு துணி கொண்டு உடம்பை மறைத்து தன்  சத்தியத்தால் இம்மண்ணில் நிகழ்த்தினாரே ஒரு கிழவன் அது புரட்சி.

இந்த தேர்தலிலே தன் representative  எப்படிப்பட்டவன் என  இன்றைய   இளைஞன்   நோக்கினாலே அது புரட்சி என்பேன் .

S.Natarajan

வணக்கம்,

தங்களுடைய கட்டுரையை இன்று தினமலர் தேர்தல் களம் பகுதியில் படித்தேன்.
அனைத்தும் நல்ல கருத்துக்கள். மிகச்சிறந்த அரசியல் பார்வை. நீங்கள் எதிர்பார்க்கும் அரசியல் சூழல் விரைவில் தமிழகத்தில் ஏற்பட எனது நெஞ்சம் கனிந்த வாழ்த்துக்கள்.

நன்றி,
மணிகண்டன்.மா

முந்தைய கட்டுரைதினமலர் – 35 சுயேச்சைகளின் அரசியல்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 30